Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

ராஜஸ்தானில் கொடூரம்; 5 வயது சிறுவன் தரையில் அடித்துக் கொலை, சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு


ராஜஸ்தானில் 5 வயது சிறுவன் கொடூரமாக தரையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளான். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் 5 வயது சிறுவனை மர்ம நபர் தரையில் அடித்துக் கொலை செய்து உள்ளான். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. சிறுவனை தூக்கி சென்று மர்ம நபர் தரையில் அடித்துக் கொன்றுவிட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. சிறுவன் தலையில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கும் காட்சி பதபதைக்க செய்து உள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து, கொலையாளியை தேடிவருகின்றனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.