Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

மருத்துவ துறையில் சாதனை புரிந்த முதல்கள்!


* உலகின் முதல் விழிவெண்படல மாற்று சிகிச்சை 1905ம் ஆண்டு, இன்றைய செக் குடியரசில் செய்யப்பட்டது. இன்று வருடா வரும் ஒரு லட்சத்து 20ஆயிரம் விழிவெண்படல மாற்று சிகிச்சை செய்யப் படுகிறது.

* உலகின் முதல் சிறுநீரக மாற்று சிகிச்சை 1954ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. இது இன்று, வருடத்திற்கு 78 ஆயிரம் பேருக்கு செய்யப் படுகிறது.

* உலகின் முதல் இடுப்பு மாற்று சிகிச்சை பிரிட்டனில் 1962ம் ஆண்டு நடந்தது. இன்று வருடம் முழுவதும் சுமார் 1.4 மில்லியன் மக்கள், இந்த மாற்று சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

* முதல் நுரையீரல் மாற்று சிகிச்சை அமெரிக்காவில் 1963ம் ஆண்டு நடந்தது. இன்று சுமார் 4300 பேர் வருடத்திற்கு இந்த மாற்று சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

* ஸ்வீடனில்தான் 1965ம் ஆண்டு, முதல் டைட்டானியம் பல்பொருத்துவது தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் இதனை சகஜமாக அனைவரும் செய்து கொள்கின்றனர்.

*அமெரிக்காவில் 1967ம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று சிகிச்சை நடந்தது. இன்று இந்த சிகிச்சையை உலக அளவில் வருடா வருடம் 20 ஆயிரம் பேர் செய்கின்றனர்.

*தென் ஆப்ரிக்காவில் முதல் இருதய மாற்று சிகிச்சை 1967ம் ஆண்டு செய்யப்பட்டது. இன்று வருடா வருடம் 6 ஆயிரம் பேர் இந்த மாற்று சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

*அமெரிக்காவில் உலகின் முதல் கணைய மாற்று சிகிச்சை 1968ல் செய்யப்பட்டது. வருடா வருடம் இன்று 2500 பேர் இதனை செய்து கொள்கின்றனர்.

*பிரிட்டனில்தான் உலகின் முதல் மூட்டு மாற்று சிகிச்சை 1968ல் வெற்றிகரமாக செய்யப் பட்டது. இன்று இதனை வருடா வருடம் 1.1 மில்லியன் பேர், செய்து கொள்கின்றனர்.

*அமெரிக்காவில், உலகின் முதல் காது கேட்பதற்கு முக்கிய உறுப்பான காதினுள் உள்ள பகுதி மாற்று சிகிச்சை 1972ம் ஆண்டு வெற்றி கரமாக செய்யப்பட்டது. இன்று இதனை வருடா வருடம் 2லட்சத்து 19ஆயிரம் பேர் செய்து கொள்கின்றனர்.

* உலகின் முதல் செயற்கை கால்மாற்று சிகிச்சை, 1990ல் செய்யப்பட்டது. இப்போது, தேவைக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளில் செயற்கை கால்கள் செய்யப்பட்டு பொருத்தப்படுகின்றன.

*உலகின் முதல் குடல் மாற்று சிகிச்சை அமெரிக்காவில் 1992ம் ஆண்டு செய்யப் பட்டது. இன்று உலகம் முழுவதும் வருடத்திற்கு 250 பேர் இந்த சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

* உலகின் கை/விரல் மாற்று சிகிச்சை முதலில் 2000ம் ஆண்டு மலேசியாவில் செய்யப்பட்டது. உலக அளவில் தற்போது வருடத்திற்கு 85 மாற்று கை/விரல் சிகிச்சைகள் செய்யப் படுகின்றன.

* உலகின் முதல் முகமாற்று சிகிச்சை 2005ம் ஆண்டு பிரான்சில் வெற்றிகரமாக செய்யப் பட்டது. இதுவரை 25 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

* முதல் "ரொபாட்' டிக்; கை மாற்று சிகிச்சை 2007ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்தது. இந்த கருவி தற்போது வருடத்திற்கு 500 என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.

*இவற்றில் ஒன்று கூட இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். நம்நாட்டில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தை பயன்படுத்தி, பல சாதனைகளை செய்துள்ளோம்; செய்து வருகிறோம். ஆனால், அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.