Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

பெண் கற்பழிப்பு– போலீஸ்காரர் கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை ஆந்திரா கோர்ட்டு தீர்ப்பு


ஆந்திராவில் பெண் கற்பழிப்பு மற்றும் போலீஸ்காரர் கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சித்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கற்பழிப்பை தடுத்த போலீஸ்காரர் கொலை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜெகமல்லா காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணை 3 பேர் சேர்ந்து கற்பழிப்பதாக கடந்த 13.12.2013–ம் ஆண்டு பலமேர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ்காரர் ஜவஹர்நாயக் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் தேவேந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு பெண்ணை 3 பேர் சேர்ந்து கற்பழித்துக்கொண்டிருந்தனர். அதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படையினரை 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

சேலத்தை சேர்ந்தவர்கள்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பெண்ணை கற்பழித்தது மற்றும் போலீஸ்காரர் ஜவஹர்நாயக் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த தேவேந்திரகுமாரை கொலை செய்தது சேலத்தை சேர்ந்த சம்பத் என்ற மணிகண்டன்(வயது23), காசி என்ற முருகன்(32) மற்றும் பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் 3 பேர் மீதும் கொள்ளை மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்குகளும் உள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சித்தூர் மாவட்ட 8–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும்போது குற்றவாளிகளில் ஒருவரான பிரேம்குமார் புற்றுநோயால் இறந்து விட்டார்.

25 ஆண்டுகள் ஜெயில்
இந்த வழக்கில் நீதிபதி சிதானந்தா தீர்ப்பு கூறினார். அப்போது அவர் குற்றவாளிகள் சம்பத், காசி ஆகிய இருவருக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். கொள்ளை வழக்கில் இருவருக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.