Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2016

பேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்


உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சில்லிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமையகங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சான் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை ஒட்டிய சொத்துக்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடம் சான் பிரான்சிஸ்கோவின் கடற்கரையில் 430,000 சதுரடியில் அமைந்துள்ளது. மிகவும் தாழ்வான பகுதியை தலைமையிடம் அமைக்க பேஸ்புக் நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஏன் என புரியவில்லை என கலிபோர்னியா வளர்ச்சி கழக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.6 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரக் கூடும் என்பதால் பேஸ்புக் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.

இதே போன்று கூகுள் நிறுவனத்தின் தலைமையிடம் மலைஅடிவாரத்திலும், சிஸ்கோ தலைமையகம் சான் ஜோஸ் பகுதியை ஒட்டிய கடல் பகுதியிலும் அமைந்துள்ளன. புவி வெப்பமயமாதலால் அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால் கடல்மட்டமும் உயர துவங்கி உள்ளது. இது 6 அடி வரை உயரும் போது இந்நிறுவனங்களின் தலைமையகங்கள் நீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுளும், பேஸ்புக்கும் தங்களின் தலைமையகங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதே நல்லது. ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இடத்தை மாற்றுவது அவர்களின் ரேடார்களை பாதிக்கும் என்பதால் சிக்கலான நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனங்கள் மட்டுமின்றி, கடுமையான புயலால் கடல் மட்டம் உயரும் போது கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.