திருப்பூரில் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களுக்கு கேக்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதில், 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உடையில் வந்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு மும்மூர்த்தி நகர், சக்தி நகர் பகுதியில் பிரபல வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு 50 வயதுள்ள ஒருவர் போலீஸ் உடையில் வந்துள்ளார். மேலும், தான் தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி கையில் இருப்பதாகவும், அதை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் வங்கி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பிறந்தநாள் என்று கூறி வங்கி ஊழியர்களுக்கு கேக் கொடுத்துவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து வங்கி ஊழியர்களில் சிலர் அவர் கொடுத்த கேக்கை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வங்கி ஊழியர்களான பிரபுராஜ் (28), சரவணன் (28), வீரமணி (21), பழனிச்சாமி (35), விமலா (25) ஆகிய 5 பேரும் மயக்கமடைந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வங்கி ஊழியர்கள் 5 பேரையும் உடனடியாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீரமணி மற்றும் சரவணன் ஆகியோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து வங்கி மேலாளர் சிவ்ராம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை வைத்து ஆய்வு நடத்தினர். இதில், போலீஸ் உடையில் வந்தவர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்தி நகரை சேர்ந்த விஜயகோபால் (49) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகோபாலை கைது செய்தனர். விசாரணையில், கேக்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வங்கி ஊழியர்கள் மயக்கமடைந்த பின்னர், வங்கி பணத்தை கொள்ளையடிக்க விஜயகோபால் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.