பொதுவாக நாம் முக அழகைப் பெறுவதற்காக பேஷியல் செய்து கொள்கிறோம். ஆனால் பேஷியல் என்பது முக அழகை விட மன
அமைதிக்குத்தான் செய்யப்படுகிறது என்கிறார் நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.
பேஷியல் என்பது என்ன?
பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை
நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.
பேஷியல் செய்யும் முறை எப்படி?
பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக்
கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.
சுயமாக பேஷியல் செய்து கொள்ளலாமா?
மற்றவரிடம் பேஷியல் செய்து கொள்வதால் நூறு விழுக்காடு பலன் கிடைக்கும் என்றால், நீங்களே செய்து கொள்ளும் போது 20 விழுக்காடுதான்
கிடைக்கும்.
மற்றொருவர் நமக்கு மசாஜ் செய்யும் போதுதான் அதன் பலன் நமக்குக் கிடைக்கும். நமக்கு நாமே செய்து கொள்ளும் போது முக்கியமாக பிரஷர்
பாய்ண்ட்டுகள் நமக்குத் தெரியாது. எதையும் சரியாக செய்யும் போதுதான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நமக்கு நாமே செய்யும் போது
டென்ஷன் அதிகரிக்கத் தான் செய்யுமேத் தவிர மன அமைதிக் கிடைக்காது.
மன அமைதியைப் பெற வேண்டுமானால் மாதத்தில் ஒரு முறை அழகுக் கலை நிபுணரிடம் செய்து கொள்வதுதான் சிறந்தது.
கல்யாணப் பெண் எந்த விதமான பேஷியல் செய்து கொள்ளலாம்?
எந்த பேஷியலாக இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் சருமத்தைப் பொறுத்தே தேர்வு செய்ய முடியும்.
முதன் முதலாக பேஷியல் செய்து கொள்ள வரும் திருமணப் பெண்ணிற்கு ப்ரூட் பேஷியல்தான் தேர்வு செய்வேன்.
ஏற்கனவே பல முறை பேஷியல் செய்தவர்களாக இருந்தால் மட்டும் கோல்ட் பேஷியல் தேர்வு செய்வேன். கோல்டு பேஷியல் செய்தால்
திருமண சடங்குகள் முடிந்தும் அவர்களது சருமம் பொலிவாக இருக்கும்.
ஆனால் பேஷியல் செய்து வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தால் 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை சருமத்தின் பொலிவு வெளிப்படும்.
ஆனால் திருமணப் பெண் எப்படி வெளியில் செல்லாமல் இருப்பார்கள். ஷாப்பிங், அது இது வென வெளியில் செல்ல வேண்டி வரும் என்பதால்
அதற்கு கோல்டு பேஷியல் ஏற்றதாக இருக்கும்.
கோல்டு பேஷியலுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன?
பேஷியலில் சில்வர் பேஷியல், கோல்டு பேஷியல், டைமண்ட் பேஷியல் என பல வகை இருந்தாலும் கோல்டு பேஷியல் எல்லாருக்குமே
பொருந்தி விடும்.
எந்த பேஷியலாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் க்ரீம்கள்தான் மிகவும் முக்கியம். அதைப் பொருத்தே அந்த பேஷியல் எப்படி வரும்
என்பதைக் கூற முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.