Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

அழகு சாதனங்களுக்கும் எக்ஸ்பைரி இருக்கு


எக்ஸ்பைரி என்பது மருந்துகளுக்கும், உணவுகளுக்கும் மட்டுமில்லை. அழகு சாதனங்களுக்கும் அது அவசியம். ‘‘தினசரி நீங்க உபயோகிக்கிற ஃபேர்னஸ் கிரீம், காம்பேக்ட் பவுடர், ஐ ஷேடோ, மஸ்காரா, லிப்ஸ்டிக்னு அழகு சாதனங்களுக்கும் ஆயுள் காலம் இருக்கு. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி, அதை உபயோகிச்சு, உங்க சரும அழகையும் ஆரோக்கியத்தையும் நீங்களே கெடுத்துக்காதீங்க...’’ - எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் சரும மருத்துவ நிபுணர் தலத் சலீம்.

‘‘எந்த அழகு சாதனம் வாங்கினாலும், முதல்ல நீங்க பார்க்க வேண்டியது, அதோட எக்ஸ்பைரி தேதி. எக்ஸ்பைரி முடிஞ்ச அழகு சாதனங்களை உபயோகிக்கிறதால, அலர்ஜி வரலாம். சருமத்துல சிவந்த தடிப்புகள் வரலாம். பரு, கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளிகள், மங்கு வரலாம். ஒரு கட்டத்துல உங்க சருமத்தோட இயல்பான நிறமே மாறிப் போகலாம்.

அதுலயும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவங்களுக்கு இந்த பாதிப்புகள் ரொம்பத் தீவிரமா இருக்கும்’’ என்கிற டாக்டர் தலத், காலாவதியாகிப் போன எந்தெந்த அழகு சாதனங்கள், எந்த மாதிரியான பாதிப்புகளைத் தரும் என்றும் விளக்குகிறார்.

‘‘காலாவதியான கிரீமும் காம்பேக்ட் பவுடரும் பெரிய பெரிய பருக்களையும் கட்டிகளையும் ஏற்படுத்தும். பழைய லிப்ஸ்டிக், உதடுகளை வீங்கச் செய்யும். அரிப்பை உண்டாக்கும். மஸ்காரா, கண்கள்ல இன்ஃபெக்ஷனை உண்டாக்கி, கண் இமை முடிகளை உதிரச் செய்யும். அதே ஐ ஷேடோவா இருந்தா, ‘ரெட் ஐ’னு ஒரு பிரச்னையை உண்டுபண்ணும்.

எக்ஸ்பைரி ஆன ஐ ஷேடோ, மஸ்காராவுல பாக்டீரியா தொற்றும். கண்களைச் சுற்றி உபயோகிக்கிற பொருள்கள் என்பதால, கருவிழியைக் கூட அது பாதிக்கலாம். சில வகை அழகு சாதனங்கள்ல ஆர்சனிக், லெட், ஸிங்க் ஆக்சைடு கலந்திருக்கலாம். அப்படிப்பட்ட பொருள்களை காலாவதியான பிறகும் உபயோகிக்கிறதால, இள வயசுலயே சுருக்கங்கள், கோடுகள் வரவும் வாய்ப்புகள் அதிகம்...’’

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.