April 29, 2016
வேட்பு மனு கேட்டு கெஞ்சிய அதிகாரி... 'ஒண்ணு நாலாகட்டும்...' பதிலளித்த அமைச்சர்!
வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், தேர்தல் அதிகாரி மனுவை கேட்க, அதற்கு அமைச்சர், 'ஒண்ணு நாலாகட்டும்' என கூறியது தமிழ் தெரியாத தேர்தல் புரியாததால் அங்கு காமெடி அரங்கேறியிருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும், இன்று மதியம் 12.50 மணி முதல் 1.20 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யும்படி கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. இதன்படி, சிவகாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இன்று மதியம் 12.30 மணிக்கு சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலர் அறைக்குள் நுழைந்ததும், சேரில் உட்கார்ந்து வேட்புமனுவை சரி பார்த்தார்.
எல்லாம் சரியாக இருக்கவும், தேர்தல் அதிகாரி உடனே தாக்கல் செய்யும்படி கூறி, மனுவை கொடுங்கள் என்றார். ஆனால், அமைச்சர் கட்சி தலைமையின் ராசியை நினைத்தாரோ அல்லது தன் ராசி நம்பரை நினைத்தாரோ, மனுவை கொடுக்கவில்லை. இதை அறியாத அதிகாரி, கெஞ்சாத குறையாதாக மனுவை கேட்க, அமைச்சரோ 'ஒண்ணு நாலாகட்டும்...' (அதாவது மணி 1.04) என்றார்.
வட மாநில ஐ.ஏஸ்.எஸ். அதிகாரியான அமா் குஷ்வாஹா அவரோவுக்கு தமிழ் சரியாக தெரியாததால், மீண்டும் மனுவை கேட்க அமைச்சர் திரும்பவும், 'ஒண்ணு நாலாகட்டும்' என்று பழைய பல்லவியை பாட... திரும்பவும் அதிகாரி கேட்பதும், அமைச்சர் அதே பதிலை சொல்வதுமாக ஒரே காமேடிதான்.
இரண்டு பேரும் நடத்திய கூத்தில் ஒரு வழியாக மணி 1.04 ஆனது. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு 1.20 மணிக்குள் அங்கிருந்து வெளியேறினார்.
ஆனால், தேர்தல் அதிகாரியான வட மாநில அதிகாரி, அமைச்சர் ஏன் மனு தாக்கலுக்கு தாமதம் செய்தார் என்று சக அதிகாரிகளிடம் கேட்க, அவர்கள் அ.தி.மு.க தலைமையின் ராசியை பற்றி சொல்லி புரிய வைப்பதற்குள், அவர்களுக்கும் போதும் போதும் என்றாகி விட்டது.
வேட்பு மனு கேட்டு கெஞ்சிய அதிகாரி... 'ஒண்ணு நாலாகட்டும்...' பதிலளித்த அமைச்சர்!
Reviewed by Anitha
on
April 29, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
April 29, 2016
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


நீங்கள் கூறுவது அமைச்சர் செந்தில் பாலாஜி-யா, இல்லை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி-யா விளக்கவும்.
ReplyDelete