Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

சுக்கு குழம்பு


தேவையான பொருட்கள்:

சுக்கு – ஒரு சிறிய துண்டு,
மிளகு – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
சின்ன வெங்காயம் – ஒரு கப்,
தக்காளி – 1,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

* எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

* சுவையான சுக்கு குழம்பு ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.