காட்டில் முயல் ஒன்று வசித்து வந்தது. அந்த முயல் காட்டில் உள்ள பச்சிலை மருத்துவத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தது. பச்சிலைகள் மூலம் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு வைத்தியம் செய்து வந்தது முயல். அதன் காரணமாக, காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் அந்த முயலைக் கண்டால் வணங்கின. அதனை மதிப்போடும், மரியாதையோடும் வைத்திருந்தன. இதன் காரணமாக, அந்த முயலுக்கு ஆணவம் அதிகமாகியது.
""காட்டிற்கே கடவுள் நான்தான். என்னால் தான் எல்லாருடைய நோயினையும் குணப்படுத்த முடிகிறது. எனவே, எல்லாரும் என்னைக் கடவுளாக பூஜிக்க வேண்டும். தினமும் மலர் எடுத்து வந்து எனக்கு பாத பூஜை செய்ய வேண்டும்,'' என்று கட்டளையிட்டது.
"அந்த முயலை பகைத்துக் கொண்டால் அதன்பின்னர் நோய் ஏற்படும்போது, தங்களுக்கு மருந்து தர யாரும் இல்லையே...' என்ற எண்ணத்தோடு, வேறு வழியில்லாமல், மற்ற விலங்குகளும் அந்த முயலுக்குப் பாத பூஜை செய்தன.
அன்று வழக்கம்போல், சிங்கம் முயலுக்கு பாத பூஜை செய்தது.
"காட்டு ராஜாவே நமக்குப் பாத பூஜை செய்துவிட்டார். இனிமேல் இந்தக் காட்டில் நாம் எல்லாரையும் அடக்கியாள வேண்டும்' என்று மனத்துள் நினைத்தது முயல்.
ஒருநாள் அந்த முயல் காட்டில் உள்ள எல்லா மிருகங்களையும் அழைத்தது. அனைத்தும் முயலின் முன்னே ஒன்று கூடின.
""அடிமைகளே, உங்கள் எல்லாரையும் எதற்கு அழைத்திருக்கிறேன் தெரியுமா?'' என்று கேட்டது முயல்.
நம்மையெல்லாம் இந்த முயல், "அடிமைகளே' என்று அழைக்கிறதே! என்று எல்லா மிருகங்களும் மனவருத்தமடைந்தன. இருந்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த முயலின் பேச்சுக்கு தலைவணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து அமைதியாக நின்றன.
அந்த நேரத்தில் கிராமத்திலிருந்து காட்டிற்கு தப்பி வந்த நாய் ஒன்று அந்தக் கூட்டத்தைக் கண்டது. காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் எதற்காக இப்படி கூடி நிற்கின்றன என்று அந்த நாய்க்குத் தெரியவில்லை. அந்த நாய் கூட்டத்தில் புகுந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.
முயலோ கம்பீரமாக, ""அடிமைகளே, நீங்கள் எல்லாரும் எனக்கு அடிமைகள். அடிமைகள் என்று பல முறை கூறிக் கொள்வேன். இதுவரையிலும் நீங்கள் எனக்கு தினமும் காலையில் பாதபூஜை மட்டும் தான் செய்து வந்தீர்கள். இனிமேல், நீங்கள் தினமும் எனக்கு மூன்று வேளையும் உணவு கொண்டு வந்து தர வேண்டும். அதோடு எனக்குக் காலையில் பாதபூஜை செய்வது போன்று, மாலையிலும் பாத பூஜை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் நோய்களுக்கு நான் பச்சிலை மருந்துகளைத் தருவேன். இல்லையேல், எந்த மருந்தும் தரமாட்டேன். நீங்கள் நோய் குணமாகாமல் உயிரை விட வேண்டியது தான்,'' என்று கூறியது.
முயல் இவ்வாறு கூறியதும், மற்ற மிருகங்கள் செய்தவறியாது திகைத்தன. முயலின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒருமனதாக எல்லாம் முடிவு செய்தன.
""முயலே, நீ எங்களுக்கு வைத்தியம் பார்க்காமல் இருந்துவிடாதே... உன்னுடைய பேச்சுக்கு நாங்கள் எல்லாரும் கட்டுப்படுகிறோம்,'' என்று எல்லாம் சேர்ந்து கூறின.
அதனைக் கேட்ட முயல் ஆணவத்தால் தன் தலையை சிலிர்த்துக் கொண்டது.
முயலையே பார்வையிட்ட நாய்க்கு அதன் ஆணவம் புரிந்து விட்டது. "இந்த ஆணவக்கார முயலை அடக்கவேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தது நாய்.
"நாம் முயலை அடக்க முற்படுவதால் காட்டில் எந்த விலங்குகளாலும் நமக்குப் பாதிப்பு ஏற்படாது' என்று நினைத்தது நாய். அதனால் துணிச்சலோடு களத்தில் இறங்கியது.
கிராமத்தில் தனக்கு நோய் ஏற்படும் நேரம் இந்தக் காட்டிற்கு வந்து பச்சிலைகள் உண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது இந்த நாய். அதனால் நாய்க்கு மூலிகைகளைப் பற்றி நன்கு தெரியும்.
ஒருநாள் காட்டின் மேடான பகுதிக்குச் சென்றது. நாய் தன் வாயில் ஏராளமாக மூலிகைச் செடிகளை கவ்வி வைத்திருந்தது. அந்தப் பக்கமாக செல்கிற விலங்குகளை எல்லாம் அழைத்தது.
நரி, யானை, கரடி முதலியன நாயின் குரலுக்கு கட்டுப்பட்டு அதன் அருகில் சென்றன.
""நண்பர்களே, உங்களைப் போன்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டி நான் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். உங்கள் நோய் எதுவாகயிருந்தாலும் அதனை ஒரு நொடியில் என்னால் குணப்படுத்த முடியும்,'' என்றது நாய்.
நாயின் பேச்சு அந்த விலங்குகளுக்கு வியப்பை அளித்தன.
""நாயே, நான் இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலில் அவதிப்படுகிறேன். அந்த முயல் எனக்கு வைத்தியம் செய்தும், என் நோய் குணமடையவில்லை. நீயாவது வைத்தியம் செய்து என் நோயைக் குணப்படுத்து,'' என்றது நரி.
நாய் உடனே தன்னிடம் இருந்த பச்சிலையை நரிக்கு உண்ணக் கொடுத்தது. அந்தப் பச்சிலையை சாப்பிட்டு முடித்ததும் பூரண குணமடைந்தது நரி. அதனைக் கண்டு மற்ற விலங்குகள் எல்லாம் வியப்படைந்தன.
இந்தச் செய்தி காட்டில் உள்ள எல்லா மிருகங்களுக்கும் பரவியது. அவை எல்லாம் நாயை அதிசயமாகப் பார்த்தன. சிங்க ராஜாவோ நாயைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
""சிங்க ராஜாவே, வணக்கம். நான் காட்டில் வாழ்ந்து பழக்கமில்லாதவன். இருந்தாலும் எனக்குத் தெரிந்த மருத்துவக் கலையினை உங்களுக்குப் பயன்படுத்தி சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வந்துள்ளேன்,'' என்றது நாய்.
""நாயே, உனது சேவையை எப்படிப் பாராட்டுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. உனது இந்த சேவையை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்,'' என்றது சிங்கராஜா.
""முயல் ஏதோ ஓரிரு வைத்திய முறைகளைக் கற்றுக்கொண்டு, உங்களை அடிமைப்படுத்தி வருவதை நான் நேரில் கண்டேன். அந்த முயலின் கொட்டத்தை அடக்க வேண்டி நான் எனது திறமையை மேலும் காட்ட நினைக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும்,'' என்றது நாய்.
""நாயே, உன்னுடைய துணிச்சலை நாங்கள் பாராட்டுகிறோம். நீ அந்த முயலின் கொட்டத்தை அடக்கினால், நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவோம்!'' என்றது சிங்க ராஜா.
""சிங்க ராஜாவே, இதைத்தான் நானும் எதிர் பார்த்தேன். நீங்கள் எனக்கு உத்தரவு கொடுத்து விட்டீர்கள். இப்போதே அந்த முயலுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன். அதன் பின்னர் இந்தக் காட்டில் உங்களுக்கு அன்புடன் வைத்திய சேவையினை செய்கிறேன்,'' என்றது நாய்.
""நாயே! அந்த முயல் காட்டாற்றுப் பக்கமாக ஓர் பாறையின் மீதுதான் வழக்கமாக அமர்ந்திருக்கும். நீ அங்கு சென்றால் அந்த முயலைப் பார்க்கலாம்,'' என்றது சிங்கராஜா.
துள்ளிக் குதித்தபடி அந்த காட்டாற்றுப் பக்கமாக ஓடியது நாய். காட்டாற்றின் பாறையின் மீது அமர்ந்திருந்தது முயல்.
நாயைக் கண்ட முயல் வியப்புற்றது.
உடனே நாய், ""முயலே, என்னைக் கண்டு நீ பயப்பட வேண்டாம். உனக்கு நான் பாத பூஜை செய்யவே வந்துள்ளேன். உன் பாதத்தைக் காட்டினால் இப்போதே நான் பூஜை செய்து விடுகிறேன்,'' என்றது.
அதனைக் கேட்ட மாத்திரத்தில் முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. காட்டில் உள்ள மிருகங்கள்தான் நமக்குப் பாத பூஜை செய்கின்றன என்று நினைத்தேன். ஆனால், நாட்டில் வசிக்கிற இந்த நாய்கூட நமக்குப் பாத பூஜை செய்ய முன் வந்துள்ளதே. நமது புகழ் நாடெங்கும் பரவி இருக்கிறது. நம்மை விடச் சிறந்த வைத்தியர் இந்த உலகத்தில் வேறு யாருமே இருக்க முடியாது என்று தன்னை பெருமை பொங்க நினைத்தபடி பூஜைக்குத் தயாராக தன் கால்களை முன்னே நீட்டியது முயல்.
முயலின் கால்களின் அருகே சென்றது நாய். முயலோ மகிழ்ச்சியோடு கண்களை மூடியபடி இருந்தது. நாய் தன் கோரப்பற்களைக் காட்டிய படி மின்னல் வேகத்தில் முயலின் கழுத்தை கடித்துக் குதறியது.
ஆணவம் பிடித்த முயலோ துடிதுடித்தது. கழுத்தில் இருந்து ரத்தம் ஆறாய் வடியவே, பொத்தென்று தரையில் விழுந்தது.
முயலால் எழுந்து நடக்க முடியவில்லை.
உடனே நாய், ""முயலே, உனது வைத்தியத் திறமையை கையில் வைத்துக் கொண்டு இந்தக் காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் உனக்கு அடிமைப்படுத்தி வந்தாய். இப்போது உனக்கு வைத்தியம் செய்ய யார் இருக்கின்றனர்? உன் ஆணவத்தை அடக்கவே உனக்கு நான் இந்தத் தண்டனையை வழங்கினேன்,'' என்றது.
கழுத்துக் காயத்துடன் ரத்தம் வழிந்தபடி, உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டமெடுத்தது முயல்.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.