ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் தேர்தல் எந்தளவிற்கு நியாயமாக நடக்கும் என்று தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் அய்யம்பாளையம் என்ற இடத்தில் அ.தி.மு.க. தொழிலதிபர் அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான கிடங்கிலிருந்து வாக்காளர்களுக்கு தருவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தகவல் கிடைத்து,
அங்கு சோதனை நடத்த கரூர் மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார். ஆய்வில் பணம் எண்ணும் எந்திரங்கள் 12, காலி பெட்டிகள், பணம் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ், 4 மகிழுந்துகள் ஆகியவற்றுடன் ரூ.10.33 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்புநாதன் இல்லத்தில் வருமானவரித்துறை நடத்திய ஆய்வில் ரூ. 4.70 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆம்புலன்சின் பதிவு எண் போலியானது என்றும், அந்த எண் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு சொந்தமானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பணத்தை பெருமளவில் கடத்திச் செல்வதற்காகவே பல லட்சம் செலவு செய்து போலி ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது வெறும் ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதை குழந்தை கூட நம்பாது.
வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்த பணமும் ஓட்டுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.4.70 கோடியை நோட்டுக்களாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் இதுதொடர்பாக அன்புநாதன் உள்ளிட்டோர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானி ஆணைப்படித் தான் அன்புநாதனின் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததுடன், அவர்களை காப்பாற்றவும் முயற்சிகள் நடப்பதைப் பார்க்கும்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என தெரியவில்லை.
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரான அன்புநாதன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி. எனவே அவரையும், அமைச்சரையும், அமைச்சருக்கு மேல் உள்ள சக்திகளையும் காப்பாற்றுவதற்காகவே அனைத்து உண்மைகளும் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகத் தோன்றுகிறது.
கரூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் இதுவரை பணியாற்றிய அனைத்து இடங்களிலும் அதிமுகவின் ஆதரவாளராகவே செயல்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி இரவு கிருஷ்ணராயபுரத்தில் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி அன்பு செல்வம் நடத்திய வாகன ஆய்வில் கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வந்த வாகனத்தில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த கரூர் ஆட்சியர் ராஜேஷ் அந்த தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு மிரட்டி, அதிமுக வேட்பாளரை விடுவிக்கும்படி ஆணையிட்டிருக்கிறார். மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஷ் போன்றவர்களே அதிமுக நிர்வாகிகளாக மாறி முறைகேடுகளுக்கு துணை போவது ஜனநாயகத்தை அழித்து விடும்.
எனவே, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள் முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆலோசகர் வரை அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும்." இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.