சிவகங்கையில் பணப்பட்டுவாடாவை படம் எடுத்த ஆர்.டி.ஓ.,வை (தேர்தல் நடத்தும் அலுவலர்)அவதுாறாக பேசி அலைபேசியை பறித்த தி.மு.க.,வினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு வந்தோருக்கு உணவுக்காக ரூ.150 கொடுக்கப்பட்டது.
விடுபட்டோருக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் அலுவலகத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் அரவிந்தனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர்,பணப்பட்டுவாடா செய்வதை அலைபேசி மூலம் படம் எடுத்தார்.'நீ யாரு படம் எடுக்க,' என பணம் கொடுத்தோர் கேட்டனர். 'நான் தேர்தல் நடத்தும் அலுவலர்,' என அடையாள அட்டையை காண்பித்ததும், அவரது 2 அலைபேசிகளையும் பணம் கொடுத்தோர் பறித்து கொண்டனர். அவரை அவதுாறாக பேசி தாக்க முற்பட்டனர். ஒன்றியச் செயலாளர் அவர்களை சமரசப்படுத்தியதும், அலைபேசிகளை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து கலெக்டர் மலர்விழி, போலீசார் வந்தனர். அதற்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகராறு செய்தோர் தப்பினர்.
அவர்களை ஒப்படைக்காததால் ஜெயராமனை போலீசார் பிடித்து சென்றனர். அவரை விடுவிக்க வலியுறுத்தி வேட்பாளர் சத்யநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின் தகராறில் ஈடுபட்ட ஆனந்தகுமாரை ஒப்படைத்ததும் ஜெய
ராமனை விடுவித்தனர். மற்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.தேர்தல் நடத்தும் அலுவலர் அரவிந்தன் கூறுகையில், “பணம் பட்டுவாடா செய்ததை நான் அலைபேசி மூலம் படம் எடுத்தேன். என்னை அவதுாறாக பேசி அலைபேசியை பறித்து கொண்டனர். பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன்,” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.