Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

என்னிடமும் பணமில்லை, கூட்டணித் தலைவர்களிடமும் பணமில்லை! - கலகல விஜயகாந்த்


எங்கள் கூட்டணி தலைவர்களிடமோ, என்னிடமோ, எங்கள் கட்சிக்காரர்களிடமோ, பணம் இல்லை. ஆனால், நான் பணம் வாங்கி விட்டதாக கூறினார்கள். அதெல்லாம் பொய் என்று கடையநல்லூர் பிரசாரத்தில் தே.மு.திக. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் தேரடி திடலில், தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசுகையில், எங்கள் கூட்டணி ஆறுமுகங்களை கொண்ட கூட்டணி. வெற்றிக் கூட்டணி. ஆளுங்கட்சியையும், ஆண்ட கட்சியையும் வீழ்த்தும் கூட்டணியாக நாங்கள் உருவெடுத்து இருக்கிறோம்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றி வந்துவிட்டேன். எங்கள் கூட்டணிக்கு மக்களிடம் பெரும் ஆதரவு பெருகி இருப்பதை கண்கூடாக அறிகிறேன். இந்த தேர்தல் அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் நடக்கின்ற போர் போன்றது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஊழல் செய்யவில்லை. எனவே நாங்கள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. எங்களுக்கு தேர்தலில் மக்கள் ஆதரவை தந்து வெற்றி பெறச் செய்ய முடிவு செய்துவிட்டார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என சரித்திரம் பேசும். எங்கள் கட்சியில் இருந்து ஒன்றிரண்டு பேர் பிரிந்து சென்று விட்டார்கள். அதை பெரிதுபடுத்தியும் கூறினார்கள். எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம். துரோகம் செய்தவர்களை மன்னிக்க மாட்டேன். எங்கள் கூட்டணி தலைவர்களிடமோ, என்னிடமோ, எங்கள் கட்சிக்காரர்களிடமோ பணம் இல்லை. ஆனால், நான் பணம் வாங்கி விட்டதாக கூறினார்கள். அதெல்லாம் பொய். எங்களிடம் மக்கள் பலம் இருக்கிறது. திருச்சியில் மே 11ம் தேதி திறந்த வெளியில் எங்கள் கூட்டணி மாநாடு நடக்கிறது. அனைவரும் அந்த மாநாட்டுக்கு வந்து ஆதரவு தாருங்கள். எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவை தந்து அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.