மேட்டூர் மற்றும் ராசிபுரத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் திமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வீரனூர் மரிக்குண்டுகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மன்னாதன்(85). இவரது மனைவி மயிலி (80). இவர்களுக்கு செல்வம், மாதையன், மயில்சாமி என 3 மகன்களும், பாப்பாத்தி (60), தங்கம்மாள் என 2 மகள்களும் உள்ளனர். மாதையன் கடந்த 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். பாப்பாத்தி, திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை பிரிந்து தன் தாய், தந்தையருடன் வந்து தங்கிவிட்டார். மற்றவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, மன்னாதன் வீட்டு முன் பாப்பாத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், குடிசை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு மன்னாதன், மயிலி ஆகிய இருவரும் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஒரே வீட்டில் 3 பேர் கொலை செய்யப்பட்டது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், விவசாயி மன்னாதன் தன்னிடமிருந்த மூன்றரை ஏக்கர் நிலத்தை தன் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார். இதில், மூத்த மகன் செல்வம், தனக்கு சாலையோரத்தில் நிலம் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 2 ஆண்டுக்கு முன்பு பெற்றோரை கொல்ல முயன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம் தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் சிலருடன் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது 3 பேரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் செல்வத்தின் வீடு பூட்டப்பட்டிருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக கவுன்சிலர், தந்தை கொலை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டியை சேர்ந்தவர் அய்யாவு என்ற பெரியண்ணன் (65). விவசாயி. இவரது மகன் சிவக்குமார் (36). திமுகவை சேர்ந்த இவர் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். ஆர்.புதுப்பட்டி அடுத்த போதமலை அடிவாரத்தில் சிவக்குமாருக்கு தோட்டம் உள்ளது. அத்தோட்டத்தின் அருகே அதே பகுதியைச்சேர்ந்த மாரப்பன் மகன் சிவக்குமார் என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இரு தரப்புக்குமிடையே தோட்ட வழித்தட பயன்பாட்டில் மோதல் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கவுன்சிலர் சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதனால் மாரப்பனும், அவரது மகன் சிவக்குமாரும் ஆத்திரமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு சிவக்குமாரும், மாரப்பனும் கவுன்சிலர் சிவக்குமாரின் தோட்டத்து வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டுக்கு முன் வராண்டாவில் படுத்திருந்த பெரியண்ணனை ஈட்டியால் குத்தி சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த இவரின் மனைவி மாராயி (56). கண்களில் மிளகாய் பொடி கலந்த சாண தண்ணீரை ஊற்றி அவரையும் வெட்டினர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வந்த கவுன்சிலர் சிவக்குமாரையும் மிளகாய் பொடி கலந்த சாண தண்ணீரை ஊற்றி சரமாரியாக வெட்டி சாய்த்தனர். சிவக்குமாரின் மனைவி லாவண்யா(30) மீதும் மிளகாய் பொடியை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த பெரியண்ணன் சிறிது ேநரத்தில் இறந்தார். சிவக்குமார், மாராயி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர். மிளகாய் பொடி வீசியதால் நிலைதடுமாறிய லாவண்யா செல்போனில் கொடுத்த தகவலின் படி, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவக்குமார், மாராயியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். மாராயி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.