Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

வறுமை காரணமாக குழந்தையை விற்க முயன்ற தம்பதி மீது வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை


வறுமை காரணமாக இரண்டுமாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தம்பதியை அரசு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிள்ளைகள் வேண்டி லட்சக்கணக்கானோர் கோவில் கோவிலாக சென்று சாமியிடம் வேண்டுதல் வைக்கின்றனர். மேலும், பலர் குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். இப்படி குழந்தைகள் வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், வறுமை காரணமாக பெற்ற இரட்டை குழந்தைகளை விற்பனை செய்ய முயற்சித்த தம்பதி குறித்து வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகா குண்டனகெரே கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் பிரம்மகுமாரி தம்பதி. இவர்களுக்கு இரு முறை இரட்டை குழந்தைகள் பிறந்தன. இவர்கள் மிகவும் வறுமையில் இருப்பதால், முதலில் பிறந்த இரட்டை குழந்தைகளை விற்றுள்ளனர்.

இதேபோல, சமீபத்தில் பிரம்மகுமாரிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். இந்நிலையில், வறுமைக்காரணமாக ஒரு குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்க முடிவு செய்தனர். பின்னர், குழந்தையை வாங்குவோரை அழைத்து குழந்தையை ஒப்படைக்க முயற்சித்தனர். தகவல் அறிந்த மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, விற்க இருந்த குழந்தையை மீட்டனர். பின்னர், பெற்ற குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அப்படியிருக்க குழந்தையை எப்படி விற்கலாம் என கேட்டனர். அதிகாரிகளின் கேள்விக்கு தம்பதி பதில் அளிக்கையில் மிகவும் வறுமையில் உள்ளதால் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. எனவே, விற்கு முடிவு செய்தோம் என்றனர்.

அதிகாரிகள் மேலும், நடத்திய விசாரணையில் இதற்கு முன் பிறந்த இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை விற்றது தெரியவந்தது. பின்னர்,  அதிகாரிகள் பறிமுதல் செய்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.