Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

சமையல்காரர் கொலை வழக்கு தம்பதிக்கு ஆயுள் சிறை


ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சர்டு (47), இவரது மனைவி ராணி (46). இவர்களுக்கு குணால் (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகன் உள்ளார். கடந்த 2013 செப்டம்பர் 28ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் விழா நடந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டல் சமையல் தொழிலாளி வினோத் என்பவருக்கும் குணாலுக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் வினோத் தனது நண்பர்களுடன் ஆயிரம்விளக்கு அண்ணாசாலை சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது தனது பெற்றோருடன் வந்த குணால் வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே வினோத் இறந்துள்ளார். இதையடுத்து, ஆயிரம்விளக்கு போலீசார் ரிச்சர்டு, அவரது மனைவி, மகன் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குணால் மைனர் என்பதால் அவர் மீதான வழக்கு பிரிக்கப்பட்டது. ரிச்சர்டு, அவரது மனைவி ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தம்பதிக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.