Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

கூல் கூல் கோடை‌


கோடை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கசகசா ஆகியவற்றை முதல் நாள் இரவு சுத்தமான நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அவற்றை மிக்சியில் அரைத்துக் குடித்தால், வெயிலில் எவ்வளவு அலைந்தாலும் உஷ‌்ண‌ம் ந‌ம் உடலை‌த் தாக்காது.

வெள்ளரிக்காயை அரைத்து தேனில் கலந்து தினமும் காலையில் கழுத்தைச் சுற்றித் தேய்த்துக் கொண்டால், கழுத்தில் உள்ள கறுப்பு மறைந்து பளபளப்பாகி விடும்.

கோடை வெ‌யி‌லி‌ல் தோ‌ல் பகு‌திக‌ள் கறு‌த்து படை போ‌ல் ஆகுவதையு‌ம் இ‌வ்வாறு செ‌ய்வத‌ன் மூல‌ம் தடு‌க்கலா‌ம்.

எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தில் காணப்பட்டால், பென்சாயில் பெராக்சைட் அல்லது சாலிசிலிக் ஆசிட் உள்ள கிரீமை தடவவும்.

முகப்பருக்கள் முகத்தில் காணப்பட்டால், அதை ஸ்கரப்பர் வைத்து கழுவக்கூடாது. அவ்வாறு செய்வது அதன் வேர்களை உடைத்து பரவச்செய்யக்கூடும்.

ஆகவே கிரீமை அதன் மீது தடவிய பின் சிறிது நேரம் கழித்து, காட்டன் பால்ஸ் அல்லது காட்டன் துணியைக் கொண்டு துடைக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.