புதுடெல்லி,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்குவதற்கு மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கிறது.
நிர்வாக உத்தரவுகள்
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தொழிலாளர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்; தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் இருந்து உலகளாவிய சம்பளம்வரை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக முயற்சி செய்கிறது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. எனவே நாங்கள் அதை நிர்வாக உத்தரவின்மூலம் நிறைவேற்றுவோம்.
பாராளுமன்றம் சரிவர இயங்காத நிலையில், நாங்கள் காத்திருக்க விரும்பவில்லை. தொழிலாளர்களின் நலனுக்காக நிர்வாக உத்தரவுகளை போடுவோம்.
ரூ.10 ஆயிரம்
ஒப்பந்த தொழிலாளர் சட்டம் (ஒழுங்கமைப்பு மற்றும் ஒழிப்பு) விதி 25–ல் திருத்தம் கொண்டு வரப்போகிறோம். இதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளரும் மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் பெற முடியும்.
இதுதொடர்பான விதியை வகுத்து, சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்படும். அதன்பிறகு அனைத்து மாநில அரசுகளும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்
நுகர்வோர் விலை குறியீட்டு எண் மற்றும் மாறுபாடு அகவிலைப்படியை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல் உள்ளது. அதன்படி, முதலில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்த்துகிறோம். அதன்பிறகு உலகளாவிய குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
அனைத்து ஒப்பந்ததாரர்களும் மத்திய தொழிலாளர் நலத்துறையிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
குறைந்தபட்ச சம்பளம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயித்து உத்தரவிடுகிறபோது, அதன்மூலம் தெலுங்கானா, ஆந்திராவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான துப்புரவு தொழிலாளர்களும் (தற்போது மாதம் ரூ.8,500 சம்பளம் பெறுகிறவர்கள்), நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களும் பலன் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.