Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

காபி பிரியரா நீங்க? ஒரு நாளைக்கி எத்தன தடவ குடிப்பிங்க? வாங்க இதப்படிச்சுட்டு போய் குடிங்க! -


1990 வரை நாம் அறிந்தது எல்லாம் ஸ்ட்ராங்கா ஒரு காபி, லைட்டா ஒரு காப்பி, சக்கரை தூக்கலா ஒரு காபி போன்ற வகைகள் தான். ஆனால், இப்போது சி.சி.டி-க்குள் நுழைந்தால் ரகரகமாக பல வகை காபி அடங்கிய ஓர் பட்டியல் கண் முன்னே நீட்டப்படும். அவ்வளவு காபி வகைகள் உலகில் இருக்கின்றன.

இத்தாலி ஸ்பெஷல் தனி வகை. சமீப காலமாக காபி அதிகம் குடிக்க வேண்டாம் என பல ஆய்வு முடிவுகள் வெளிவந்ததை நாம் கண்டிருப்போம். ஆனால், சமீபத்தில் காபி குடியுங்கள் நல்லது என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதைப் பற்றி இனிக் காண்போம்…

மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்
NAFLD (Non-alcoholic fatty liver disease) என்பது மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் ஆகும். 70வது கிலோ எடை உள்ள நபர் ஒரு நாளுக்கு 4-6 தடவை காபி குடிப்பது அவருக்கு இந்த மது அல்லாத கல்லீரல் கொழுப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது என சமீபத்திய ஆராய்ச்சி தகவலில் கூறப்பட்டுள்ளது.

சொனுளின் (Zonulin)
ஆராய்ச்சியாளர்கள், மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து காக்க காப்பி உதவுகிறது என கூறியுள்ளனர். காபி குடிப்பதால் Zonulin எனும் புரதத்தின் அளவு உடலில் அதிகரிக்கிறது இது குடலின் ஊடுருவும் தன்மையை ஊக்குவிக்கிறது. இதனால், கல்லீரலில் உண்டாகும் மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து தீர்வு பெற முடியும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.



நாப்போலி பல்கலைக்கழகம்
இத்தாலியில் உள்ள நாப்போலி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் வின்சென்சோ (Vincenzo Lembo) என்பவர் தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். காபி NAFLD (Non-alcoholic fatty liver disease) செல்களில் எதிர்மறை தாக்கம் உண்டாக்கி பிரச்சனையை சரி செய்கிறது என இவர் கூறியுள்ளார்.

இத்தாலி
இத்தாலி காபிக்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். காபி குடிப்பது கல்லீரலில் உண்டாகும் மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயை தடுக்கிறது எனிலும், அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை
இந்த ஆய்வறிக்கை பார்சிலோனா, ஸ்பெயின்-ல் நடந்த சர்வதேச கல்லீரல் காங்கிரஸ் TM 2016 கருத்தரங்கில் முன்னிலைப்படுத்தி கூறப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.