Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

நிலக்கரி ஊழல் வழக்கில் இருவருக்கு 4 ஆண்டு சிறை


நிலக்கரி ஊழல் வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட, ஜார்க்கண்ட், 'இஸ்பாட்' நிறுவன இயக்குனர்கள் இருவருக்கு, தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, டில்லி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.
காங்., தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, 20 வழக்குகள் தொடரப்பட்டன.
இதில், ஜார்க்கண்ட் இஸ்பாட் நிறுவனம், போலி ஆவணங்களைக் காட்டி, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு பெற்றதாக, அந்நிறுவன இயக்குனர்கள், ஆர்.சி.ருங்தா, 60, ஆர்.எஸ்.ருங்தா, 79, ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

அறிவிப்பு
இந்த வழக்கை விசாரித்த, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், இவர்கள் இருவரையும், குற்றவாளிகள் என அறிவித்து, மார்ச் 28ம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன.
முன்னதாக, 'எங்களுக்கு குறைந்த தண்டனை விதிக்க வேண்டும்' என, இவர்கள் இருவர் தரப்பிலும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பரத் பரஷார், இருவருக்கும் தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
தீர்ப்பு
மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு, 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால், ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜாமீன்
கோர்ட்டில் ஆஜராகியிருந்த இருவரும், உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், சிறப்பு கோர்ட்டில் இவர்கள், ஜாமின் பெற முடியாது. ஐகோர்ட்டில் தான், ஜாமின் கோர முடியும். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான, 20 வழக்குகளில் முதல் வழக்காக, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இன்னும், 19 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.