Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

முடிவுக்கு வந்த ஒரு குழந்தை கொள்கை: அதிகரிக்கும் சிறார் திருமணம்... தவிக்கும் பெற்றோர்கள்!


பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கைக்கு சீனா முற்றுப்புள்ளி வைத்ததன் எதிரொலியாக,  அங்கு இளம் வயதினர் திருமணம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் சட்டபூர்வமான திருமண வயது என்பது ஆண்களுக்கு 22 வயதும், பெண்களுக்கு 20 வயதுமாகும். ஆனால் தென்பகுதி சீனாவில் உள்ள மக்கள், இந்த சட்டத்தை கண்டுகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, பெரும்பாலானோர் சிறு வயதிலேயே திருமணத்தை முடித்துக்கொண்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்கின்றனர்.

பெரும்பாலான குடும்பங்களிலும் இளவயது பெற்றோர்,  தங்கள் பிள்ளைகளை தங்களது வயதான பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, வேலை நிமித்தம் வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். பள்ளிப் பருவத்திலேயே திருமணம் செய்து கொள்வதாலும், போதிய விழிப்புணர்வு ஏற்படும் முன்னரே தாய்மை அடைய நேரிடுவதாலும் பெருவாரியான பெண்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் உள்ளனர்.

சில குடும்பங்களில் வருவாய் தேடிக்கொள்ளாத இளம்வயது தம்பதியினருக்கு,  அவர்களின் அன்றாட தேவைக்கான பணத்தை அவர்களது பெற்றோரே தங்களது மாதவருவாயில் இருந்து பகிர்ந்து தருவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் ஆண் - பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு பிடித்த ஜோடியை தேடிக்கொள்வதை, மிகவும் கடினமான பணியாக இளைஞர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே மிகக் குறைவான வயதிலேயே, இளைஞர்கள் தங்களுக்கான துணையை வெகு சீக்கிரத்தில் தேடிக்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 13 வயதிலேயே தாய்மையடையும் நிலைக்கு பெரும்பாலான இளம்வயது பெண்கள் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.