Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!


நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக  ஒரு private hospital ல் admit செய்யப்பட்டிருந்தாள்.   Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் ,
வேறுவழியின்றி சம்மதித்தபின்  சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,treatments என்று பெரிய bill-லை கொடுக்க  அதையும் கட்டினார்கள் !
பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே  இந்த இரண்டு வார
 பணத்திற்காகத்தான்!

லட்சக்கணக்கில் பணமிருந்தால் எவ்வளவு பெரிய முட்டாளையும் டாக்டர் ஆக்கிவிட முடியும் என்ற கொள்கையில் தான் பல மருத்துவ கல்லூரிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன!

அது போன்ற டாக்டர்கள் இயற்கையான பிரசவத்திற்கு முயற்சி எடுப்பதே இல்லை, அவர்களுக்கு அது தெரியவும் தெரியாது! இயற்கை பிரசவம் அரிதாக போய் சிசேரியன் தான் இப்போது சீசனாகிவிட்டது!! இரண்டு வாரத்திற்கு பிறகு
Discharge செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்!!  குடும்பத்தினர் உறவினர் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அந்த குழந்தையை பெற்ற தாய்க்கு பெரிதாய் மகிழ்ச்சி இல்லை,

அவள் சொன்ன காரணம்,

குழந்தை பிறப்பது பற்றி எவ்வளவோ கனவுடன் இருந்தேன், எலும்பு நொறுங்கும் அளவுக்கு  வலி இருந்தாலும் தாயாகப்போகிறோம் என்கின்ற சந்தோஷத்தில் எல்லாவலியையும் பொறுத்துக்கொண்டு இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன், ஆனால் மயக்கமருந்து கொடுத்து மயக்கம் தெளிந்தபின் இதுதான் உன் குழந்தை என்று கையில் கொடுத்தார்கள்   அதனால் தாயான உணர்வே எனக்கு இல்லை  மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அழுதாள்,  சுத்தமாக வலி தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஊசி போட்டுக்கொண்டு shopping செய்வது போல் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த காலத்தில் இப்படியும்  ஒரு பெண் ! பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.