Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2016

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஓட்டுரிமை பறிப்பு: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!


 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு தொழில் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன.

தற்போது, இந்தியாவிலும் மக்கள் தொகை பெருகி வருகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தியாவிலும், 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் ஓட்டுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவர் ஏற்கனவே, பிரதமர் மோடியை ஏற்காதவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.