தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் வயது மூப்பு சார்ந்த பிரச்னைகளால் படுத்த படுக்கையாக கிடப்பவர்கள், கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கனடா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரை திட்டமிட்டு முடிவடையச் செய்தல், வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை (Euthanasia) என்பதாகும். நோயாளியின் விருப்பத்தின் பேரில், மருத்துவரின் உதவியுடன் தன்வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதால் இதற்கு உதவி செய்யப்பட்ட தற்கொலை என்ற பெயரும் உண்டு.
நோயாளியின் விருப்பத்தைப் பெற இயலாத நேரத்தில் (உயிரை பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தை, ஆண்டுக்கணக்கில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நபர்) இதனை கருணைக் கொலை என்றும் கூறுவர்.
அவ்வகையில், கனடா நாட்டில் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் வயது மூப்பு சார்ந்த பிரச்னைகளால் படுத்த படுக்கையாக கிடப்பவர்கள், கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மருத்துவர் துணையுடன் தனது உயிரை கவுரவமான முறையில் போக்கிக்கொள்ள உதவும் இந்த சட்டம், வருகின்ற ஜூன் மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சட்டம் கனடா நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும், வெளிநாட்டினருக்கு பொருந்தாது என தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் இளம்வயது நபர்கள் இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் தேட முடியாது. இந்த சட்டத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் நபர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக இதற்கென உருவாக்கப்படும் குழுவிடம் மனுச் செய்ய வேண்டும். தங்களது விருப்பத்தை இதற்கு இடைப்பட்ட காலத்தில் திரும்பப் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.