வடிவேலு தாத்தாவின் வீட்டுக்கு போலீஸ் வந்து சில அடையாளங்களைச் சொன்னதும், அவரின் பெண்களும் பிள்ளைகளும் அலறியடித்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.
குள்ள உருவம், வெற்றிலைக் கறைப் பற்கள், நரைத்த தாடி, அரைவட்ட வழுக்கைத்தலை, தோளில் அழுக்குத் துண்டு, கையில் மஞ்சப்பை - இதுதான் வடிவேலு தாத்தாவின் அடையாளம். அடிபட்டுக் கிடந்தது அதே உருவம்தான். ஆனால் அவரின் பேவரிட் துண்டும் கைப்பையும் மிஸ்ஸிங். ஒருவித மனத்திருப்தியோடு வாரிசுகள் வீடு வந்து சேர்ந்தார்கள்.வடிவேலு தாத்தா விட்டை விட்டுப் போய் சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டிருந்தது. அவர் மனைவி பங்கஜம் உடல்நிலை பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகியிருந்தார்.
'டேய், அளுக்கு ஒரு பக்கம் போய்த் தேடுங்கடா. அந்த ஆளுதான் புத்தியில்லாம இப்படி நடந்துக்கிட்டார். திருப்பதி, திருத்தணி, மேலமருவத்தூர்னு போய்த் தேடுங்க. போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க. பிட் நோட்டீஸ் அடிக்கக் கொடுங்கடா. காசைப் பார்த்தா ஆளு கிடைக்க மாட்டாருடா' இரண்டாவது மகள் கந்தன் கத்தினான்.
வடிவேலு தாத்தா தன் பிள்ளைகளிடம் கோபப்பட்டு வீட்டை விட்டு போவதும் திரும்ப வருவதும் உண்டு. ஆனால், இந்த முறை தம் பிள்ளைகளுடன் நடந்த வாக்குவாதத்தில் ரொம்பவே கோபமாய் இருந்தார்.
'சொத்தைப் பிரிச்சுக் கொடுத்தா நாங்க ஏதாவது வேலையைச் செஞ்சு பிழைச்சுக்குவோம்ல. தங்கச்சிங்களுக்கு வேற கல்யாணம் பண்ணணுமில்லையா? ஏன் சொத்தை வைச்சிக்கிட்டு பூதமாட்டம் காத்துக்கிட்டிருக்கே?'
'நீ எப்படிவேணா இருப்பே... நாங்க நாத்தம்பிடிச்சு கூரையிலேயே வாழணுமா? பாதி சொத்த வித்தாவது வீட்டைக் கட்டினா என்ன?'
பிள்ளைகள் ஆளாளுக்கு பிலு பிலுவென்று பிடித்து உலுக்கினார்கள்.
'டேய், இது நான் உழைச்சுச் சம்பாதிச்சது. நீங்க சம்பாதித்துக் கல்யாணம் பண்ணிக்கங்கடா. நான் தனியா வந்துதானடா சென்னையில இந்த இடத்தை வாங்கினேன். தனியா வந்தேன். தனியா போவேன். அதுக்கப்புறம் என்னவாச்சு பண்ணிக்கங்கடா...'
'அப்ப எதுக்குய்யா பெத்தே?' நடு பையன் பல்லைக் கடித்துக் கொண்டு அப்பாவை அடிக்கப் பாய்ந்தான்.
'ஏன்யா இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறே? பசங்க கேட்டா கொடுத்துட்டு போக வேண்டியது தானே?' மனைவி பங்கஜம் பசங்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினது தாத்தாவை கடுப்பேத்தியது.
'அடிப்போடி இவளே...' என்று ஆரம்பித்து காதில் கேட்கமுடியாத அளவுக்கு பேசினார்.
இந்தச் சம்பவம் நடந்த அன்றயை தினத்திலிருந்து தான் வடிவேலு தாத்தாவைக் காணவில்லை.
கந்தசாமி கோயில் அருகில்தான் தாத்தாவின் பத்து கிரவுண்ட் நிலம் இருக்கிறது. அதில்தான் சின்னச் சின்னதாக வீடு கட்டி அவர் பிள்ளைகள் குடியிருக்கிறார்கள்.
வடிவேலு தாத்தா சின்ன வயதிலேயே திருவண்ணாமலையில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்தவர். எடுபிடி வேலையிலிருந்து பல வேலைகள் செய்து கடைசியில் கந்தசாமி கோயில் வாசலில் உள்ள மாலை கட்டும் கடையில் வேலைக்குச் சேர்ந்து மாலை கட்டத் தெரிந்து கொண்டு, பிறகு ஒருகடையை வாடகைக்கு எடுத்து அதில் சம்பாதித்து தான் இந்த இடத்தை வாங்கினார். வயிற்றை, வாயைக்கட்டி உழைத்ததால் வடிவேலு இளம் வயதிலேயே வயதான தோற்றத்தில் இருந்தார். அதனால் கோயில் தெரு நண்பர்கள் அவரை 'வடிவேலு தாத்தா' என்று கூப்பிட ஆரம்பித்து, அதுவே அவர் பெயரானது.
அவரது தோஸ்துகள் பல கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களாக இருந்தாலும் தாத்தாவுக்கு ஒரே கெட்ட பழக்கம் வெற்றிலை பாக்கு போடுவதுதான். டீ கூட குடிக்கமாட்டார். அவ்வளவு சிக்கனம். அல்லது கஞ்சம்னு கூட சொல்லலாம். ஆனால், அவருக்கு இப்போது ஒரு சிக்கல், பெண் பிள்ளைகளுக்கக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். வீடு கட்டவேண்டும்.
வடிவேலு தாத்தாவுக்கு ஆறு பிள்ளைகள், மூன்று பெண்கள், அதில் இரண்டு பிள்ளைகளுக்கு ஒரு பெண்ணுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு கல்யாணம் செய்யத்தான் சொத்தை விற்க வேண்டும் என்கிறார்கள் பிள்ளைகள்.
வடிவேலு தாத்தா எழுத்துக்கூட்டிப் படிப்பார். தப்பும் தவறுமாக எழுதுவார். எந்நேரமும் மாலைக் கடையில் வியாபாரமே குறிக்கோளாய் இருப்பார். மகன்களையும் பள்ளியிலிருந்து வந்ததும் கடையில் மாலை கட்டச் சொல்வார். பங்கஜம்தான் அவருடன் சண்டைப்போட்டு மகன்களை அழைத்துப் போய் படிக்க வைப்பார்.
மக்னகளாய் இருந்தாலும் மாலை போடுவதில் தப்பு செய்தால் வடிவேலுவுக்குக் கோபம் வந்து 'அந்தப் பயலே, இந்தப் பயலே' என்று தட்டித் தீர்த்துவிடுவார். அதனால் பசங்கள் அவரிடம் ஒட்டாமலே இருந்தார்கள். எல்லாமே அம்மாதான்.
தாத்தா அரசியலும் பேசுவார். அவர் ஆரம்பகால காங்கிரஸ் என்பதால், இப்ப இருக்கிற அரசியல்வாதிகளைப் பார்க்காமல் கண்டபடி திட்டுவார். அப்படித்தான் ஒருமுறை மாலை வாங்க வந்த ஒருவரிடம் பேச்சு வாக்கில் அரசியல் பேச அது அடிதடி வரை போய் நின்றது.
வடிவேலு தாத்தா ஒரு வருடமாகத்தான் கடைக்குப் போவதில்லை. யாரிடமும் சரியாக முகம் கொடுத்தும் பேசுவதில்லை. குடும்ப நிர்வாக யார் கையில் என்பதில் சிக்கல். பத்துப் பேர் சாப்பிட்டாகணுமே!
'அப்பா, நீ இப்படியே போய்க்கிட்டிருந்தா நாங்க என் பிச்சையா எடுக்கறது? கடைய இனிமே நாங்க பார்த்துக்கிறோம்' என்று சொல்லிவிட்டு பிள்ளைகளே கடையை நடத்தினார்கள்.
இது நடந்து ஒரு வருடம் கழித்துதான் பொண்ணுங்க கல்யாணப் பேச்சு பெரிய சண்டையா உருவெடுத்தது.
'இப்ப நீ கையெழுத்துப் போடுறியா இல்லையா?' கத்தினான் நடுப் பையன்.
'யேய். நான் ஏண்டா கையெழுத்துப் போடணும்? நீங்க சம்பாரிச்சு வீடு, கட்டுங்க. கல்யாணம் பண்ணிக்கங்க. யாருக்கும் கல்யாணமும் பண்ண முடியாது. நிலத்தையும் விக்க முடியாது. நான் தனியா வந்தேன். தனியா போவேன். அதுக்கப்புறம் என்னவேணா பண்ணிக்கங்க' என்று ஆரம்பித்து கண்ணாபின்னா வென்று ஆரம்பித்தார்.
வடிவேல் தாத்தா முன்பு நல்ல நிலையில்தான் இருந்தார்.அவரின் மூத்த மகள் செல்விக்கு காஞ்சிபுரத்தில் பெரிய இடத்தில் திருமணம் பேசி முடித்தார். பெண் கொடுத்து பெண் எடுத்தார். தன்னுடன் வயில்லாத பூச்சியாக வேலை பார்த்த மூத்த மகன் பாலுவுக்கு மாப்பிள்ளை வீட்டாரின் மூத்த மகளையே பேசி முடித்தார். கல்யாணத்தை அந்த ஊரே ஆச்சர்யப்படும் அளவுக்கு ஜாம் ஜாம்மென்று நடத்தி முடித்தார்.
கல்யாணம் முடிந்து ஒரு வாரத்துக்குமேல் பட்டு வேட்டி, சட்டையும் வாயெல்லாம் பல்லுமாக கலகலவென்று இருந்தார்.
அவருக்கு மூத்த பெண் பார்வதி மேல் அளவு கடந்த பாசம். அவள் பிறந்த பிறகுதான் மாலைக் கடையைச் சொந்தமாக வாங்கினார். இந்த இடத்தையும் வாங்கினார். அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்து ஒரு கௌரவமான வாழ்க்கை அமைந்தது என்று அடிக்கடி சொல்வார்.
மகன் பாலுவுக்கு கல்யாணம் பண்ணி வைத்ததை விட மகள் பார்வதிக்கு பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணிவைத்ததைதான் பெரிய விஷயமாக நினைத்தார்.
மூணு மாதம் வடிவேலு தாத்தாவுக்கு, அழுக்கு உடை இல்லை. வாரிய தலையுடன் முகச்சவரம் செய்திருந்தார். ஆனால் வெற்றிலை போட்ட காவிப் பற்களை மட்டும் காட்டிக் காட்டி சிரித்தார்.
திடீரென்று ஒருநாள் காஞ்சிபுரத்திலிருந்து வடிவேலு தாத்தா வீட்டுக்கு போன் வந்தது.
'பார்வதி தீயில கருகி இறந்துட்டா'.
கேள்விப்பட்ட வடிவேலு தாத்தா தலையைப் பிடித்துக் கொண்டு விழுந்தார். 'ஐயோ பார்வதி, என்னாச்சும்மா உனக்கு?' எல்லாரும் அலறியடித்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு ஓடினார்கள்.
வீட்டில் யாரும் இல்லை. சுற்றுக்கட்டு வீட்டின் நடுவில் கரிக்கட்டையாகக் கிடந்தாள் பார்வதி.
'அம்மா பார்வதி, அம்மா பார்வதி' கதறிக் கதறி அழுதார் வடிவேலு. பங்கஜம், தம்பிகள் எல்லாரும் அழும் ஓலக்குரல் கேட்டு ஊர் மக்கள் கூடிவிட்டார்கள்.
'நீங்கதான் அம்மாவா? அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு அவப்பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்மா? இந்தக் குடும்ப ஆளுங்க ரொம்பக் கொடுமைக்காரங்க. நீங்க அப்பவே வந்து கூட்டிகினு போயிருக்கலாம்ல. இப்ப பாருங்க பொண்ணே போச்சு. பாவம்மா அந்தப் பொண்ணு பூமாதேவியைவிட பொறுமையானதுங்க. அதுக்கா இந்த நிலைமை வரணும்?'
இதை கேட்டதும் தாத்தா அப்படியே நிமிர்ந்து பார்த்தார். 'அம்மா, எப்படி இருக்கேன்னு கேட்டப்பலாம் ஒரு வார்த்தை சொல்லியேம்மா. மௌனமாயிருந்து என்னை உயிரோட கொன்னுட்டியே..' சொல்லிவிட்டு வெளியே வந்தவர்தான். அதன்பிறகு அவர் அழவேயில்லை. பேசவில்லை. சடலத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து எடுத்தது வரை அவர் நடைப்பிணமாகவே கிடந்தார்.
சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குள் மருமகள் பற்றி வீட்டில் பேச்சு அடிபட்டது.
'நம்ம பொண்ணைக் கொன்னவங்க வீட்டுப் பொண்ணை மட்டும் நாம ஏன் வச்சிக்கணும்? உடனே அனுப்புங்க' ஆளாளுக்கு வாய்விட்டுப் பேச ஆரம்பித்தார்கள்.
மறுநாள் காலை, மருமகள் காணவில்லை. காஞ்சிபுரத்துக்குப் போன் போட்டுக் கேட்டபோது மருமகளே பேசினாள்; எனக்கும் மனசாட்சி இருக்கு. நானும் ஒரு பெண்தானே. எங்க அண்ணன்கள பத்தி எனக்கு நல்லா தெரியுமு். ஏதோ நல்ல வாழ்க்கை கிடைச்சதேன்னு சந்தோஷமா இருந்தேன். அதுலயும் மண் அள்ளி போட்டுட்டாங்க எங்க அண்ணன்ங்க.அவங்களுக்கு நான் தரும் தண்டனை வாழாவெட்டியா இருக்கறதுதான் என்று பதில் வந்தது.
இதை கேட்ட மகன் பாலு போனை சடாரென் போட்டு விட்டு வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டான்.
ஒரு மாதத்துக்கும் மேல் வீடே கலகலப்பு இல்லாமல் இருந்தது. பாலு மாலைக்கடைக்குப் போவதில்லை. வீட்டுக்குத் தாமதமாக வந்தான். பல நாட்கள் தள்ளாடி தள்ளாடி வந்தான். மதுவுக்கு அடிமையாகிவிட்டான்.
வடிவேலு தாத்தா யாரிடமும் பேசுவதில்லை. சரியாகக் கட்டப்படாத லுங்கி, பட்டன் போடப்படாத அழுக்கேறிய சட்டை, மாதக்கணக்கில் வாரப்படாத தலை, ரோட்டுக்கும் வீட்டுக்கும் ஊர்ந்து செல்வதும் வருவதுமாக இருந்தார்.
இந்த நேரத்தில்தான் மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து சொத்தின் ஒரு பகுதியை விற்கச் சொல்லி வடிவேலுவை வற்புறுத்தினார்கள்.
அவர் எதற்கு அசைந்து கொடுக்கவில்லை. 'யேய், நான் தனியா வந்தேன். சம்பாதிச்சேன். நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதே மாதிரி நீங்களும் செய்யுங்கடா. சொத்தை ஏண்டா விக்கணும்? தனியா வந்தேன் தனியா போறேன்... ' சொல்லிக் கொண்டே இடத்தைவிட்டு நகர்ந்தார்.
பிள்ளைகள் பல்லைக் கடித்துக் கொண்டு அப்பாவைத் திட்டினார்கள்
'என்ன மனுசன் இவரு? பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணணும்னு சொல்றோம். கண்டுக்காம போறாரே? எப்படித்தான் புரியவைக்கிறது?'
'டேய் விடுங்கடா. அவரு பார்வதி இறந்ததுல இருந்துதானே இப்படி மாறிட்டாரு. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிரும்' என்று பசங்க கோபத்தை தணித்தார் அம்மா பங்கஜம்.
இது நடந்து இரண்டு நாளில், 'அப்பாவை காணலைடா. தேடுங்கடா' என்று அம்மா சொல்ல அங்குமிங்கும் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. கடந்து விட்டது ஒரு வருடம்.
ஏ3 காவல் நிலையத்திலிருந்து போலீஸ் வந்து வடிவேலு தாத்தாவின் அடையாளங்களைச் சொன்னபோது, அலறியடித்துக் கொண்டு போன பிள்ளைகள், செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தார்கள்.
'சரிப்பா, நாம இப்ப ஏதாவது ஒரு முடிவு எடுத்தாகணும். என்ன யோசிச்சு வச்சிருக்கீங்க?' சித்தப்பா ஆரம்பித்தார்.
'அப்பா காணாமல் போய் ஏழு வருஷமாச்சு. இனியும் வருவாருன்னு நம்பிக்கை இல்லை. சட்டப்படி கோர்ட்டுக்கு அறிவிச்சுட்டு இடத்த வித்துட்டுப் பாகம் பிரிச்சுக்கலாம்' நடு பையன் பரபரத்தான்.
'டேய், நீங்க சரியா தேடலைங்கடா. அவரு போன உடனே தேடியிருந்தா இந்நேரம் கண்டுபிடிச்சிருக்கலாம்டா. சொத்தை விக்கிறதிலேயே இருக்கீங்க. கஷ்டமோ நஷ்டமோ ஒண்ணா இருக்கிற குடும்பம் சிதைஞ்சிபோய்டும்' கத்தினான் இரண்டாவது மகன் கந்தன்.
'அவரு உயிரோடு இருக்கும்போதே உயிர்ல எழுதி வச்சிருந்தா சிக்கலே இல்லை. இப்ப அவரால் எவ்ளோ பிரச்னை' வெறுத்துப் பேசினான் கடைசிப் பையன்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்தபடி முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள் பங்கஜம்.
வீட்டுப்பெண்கள் வாசலுக்கு முட்டுக்கொடுத்தபடி நின்றிருந்தார்கள்.
'அவரு தங்கியிருந்த அறை அப்படியே சாத்தியிருக்கே. எதுக்கே அப்படியே வச்சிருக்கீங்க. எடுத்து க்ளீன் பண்ணி விடறதுதானே' என்றார் சித்தப்பா.
'டேய் சின்னவனே, போய் அந்தக் கதவ தொற பார்க்கலாம்' என்றான் இரண்டாமவன்.
கதவைத் திறந்து சுத்தம் செய்தவன், 'சித்தப்பா, ஏதோ பத்திரம் மாதிரி ஒரு கவர்ல இருக்கு. என்னன்னு பாருங்க?'
படித்து பார்த்தவர், 'டேய் இது உங்க அப்பா பக்காவா எழுதிவச்ச உயிலுடா!' எடுத்துக் காட்டினார். அதை எடுக்கும்போதே அதிலிருந்து ஒரு கடிதம் விருந்தது. அதை எடுத்துப் படித்தார்.
'குடும்பம்ங்கறது ஒரு கோயில் மாதிரி. சேர்ந்து வாழணும். சொத்த சம்பாரிக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா செலவு செய்யறது ரொம்ப ஈஸி. உங்களுக்கு அந்த அருமை தெரிந்த பிறகு இந்தச் சொத்த என்ன வேணா பண்ணுங்க. அம்மாவ நல்லா பார்த்துக்குங்க. என் கண் முன்னாடி அந்தச் சொத்த விக்கிறத என்னால பாக்க முடியாது. நான தனியா வந்தேன். தனியா போறேன். முருகன் தான் எனக்குத் துணை.'
படித்து முடித்ததும் சித்தப்பா நிமிர்ந்து பார்த்தார். எல்லார் கண்களிலும் குளம் கட்டியிருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.