Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குழந்தையுடன் நின்ற பெண்ணை கடத்திய பஸ் டிரைவர் கைது


விருகம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (25). கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. ஆந்திராவை சேர்ந்த ஜோதி (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதால் கோபித்துக்கொண்டு முத்துகுமார் வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து ஜோதி, குழந்தையுடன் ஆந்திரா செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் ஜோதியிடம், ‘நான் மாநகர பஸ் டிரைவர். குழந்தையுடன் ஏன் தனியாக இங்கு வந்துள்ளீர்கள், என்ன பிரச்னை’ என்று கேட்டு ஆறுதல் கூறியுள்ளார். அதன்பிறகு குழந்தையுடன் ஜோதியை பஸ்சில் திருவேற்காடுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் அங்கு மது அருந்தி ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே போதை ஏறியதும் ஜோதி தூங்கிவிட்டார். அப்போது குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். திடீரென எழுந்த ஜோதி, குழந்தை மற்றும் அந்த நபர் இல்லை என்றதும் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி விடுதியில் கேட்டுள்ளார். பிரச்னை ஆகிவிடும் என்று கருதிய விடுதி ஊழியர்கள், உடனடியாக அந்த பெண்ணை விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதுபற்றி திருவேற்காடு போலீசில் ஜோதி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விடுதியில் விசாரித்தனர். குழந்தையை கடத்தியவர் நீதிமணி (45), சென்னை அருகே திருநின்றவூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தபோது, முகவரி போலியானது என்றும் தெரிந்தது. இந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் போதையில் குழந்தையுடன் நின்றிருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அந்த நபரையும் கைக்குழந்தையையும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், பிடிபட்டவர் முருகானந்தம் (40), சென்னை மாநகர பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஒழுங்கீனம் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர், சக டிரைவரை பார்க்க கோயம்பேட்டுக்கு வந்தபோது ஜோதியை ஏமாற்றி திருவேற்காட்டிற்கு அழைத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரை திருவேற்காடு போலீசில் ஒப்படைத்தனர். ‘விடுதியில் பொய்யான முகவரியை ஏன் கொடுத்தீர்கள்’ என்று கேட்டதற்கு, கோயம்பேடு பஸ் நிலையத்தில் தனியாக தவிக்கும் பெண்களை குறிவைத்து பிடித்து விடுதிக்கு அழைத்து வருவேன்’ என்று முருகானந்தம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட ஜோதி மற்றும் அவரது குழந்தை ஆகியோரை போலீசார் செங்கல்பட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

3 மனைவிகள்
கைதான முருகானந்தத்திடம் போலீசார் நடத்திய தீவிர  விசாரணையில், முருகானந்தத்திற்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் உள்ளதும்,  அவர்கள் இருவருக்கும் தெரியாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணை  திருமணம் செய்து கூடுவாஞ்சேரியில் வைத்து குடும்பம் நடத்தி வருவதும் தெரிய வந்தது.  மேலும் 3வது மனைவிக்கு குழந்தை இல்லாததால், ஜோதியின் குழந்தையை கடத்தி  சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.