Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

நடுவானில் விமானம்- ட்ரோன் நேருக்கு நேர் மோதல்- 137 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்!


இங்கிலாந்து பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ட்ரோன் என்ற சிறிய ரக விமானத்தின் மீது நேருக்கு நேராக மோதியது. விமானத்தில் இருந்த 137 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அந்த பயணிகள் விமானம்,  நேற்று சுவிஸில் உள்ள ஜெனீவா நகரிலிருந்து லண்டனில் உள்ள ஹெத்ராவ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. இந்த விமானத்தில் 5 விமான குழுவினர் உள்பட 137 பேர் பயணம் செய்துள்ளனர்.

ஓடுதளத்தை நோக்கி விமானம் தரையிறங்க முயற்சித்த அதே வினாடி, எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள்,  விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

விமானம் தரையிறக்கப்பட்டதும் இந்த விபத்து குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. தரையிறங்கும் விமானத்தின் மீது ட்ரோன் போன்ற சிறிய விமானங்கள் மோதினால் பெரும்பாலும் ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. ஆனால், ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் ஏதாவது ஒரு பக்க என்ஜினில் மோதினால், அது விமானத்தையே சாய்த்துவிடும் அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.

விமான நிலையப் பகுதிகளில்,  ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து ட்ரோன் விமானங்களை இயக்க கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது முதல் முறையாக பயணிகள் விமானத்தின் மீது ஒரு ட்ரோன் விமானம் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.