Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

தனுஷ்கோடியில் கரைஒதுங்கிய மர்ம படகுஇருவர் 'எஸ்கேப்'


தனுஷ்கோடி மணல் தீடையில் கரை ஒதுங்கிய படகை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். படகில் வந்த மர்ம ஆசாமிகள் குறித்து உளவுத்துறையினர் விசாரிக்கின்றனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து 3 கி.மீ.,ல் உள்ள 2ம் மணல் தீடையில் ஒதுங்கிய மர்ம படகை, நேற்று அதிகாலை ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனையிட்டனர். இப்படகில் பொருள்கள் ஏதும் இல்லாத நிலையில், படகை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர்.
இருவர் எஸ்கேப்: இலங்கை நீர்கொழும்பு மீனவர்களுக்கு சொந்தமான படகு என தெரியவந்துள்ளது. தனுஷ்கோடியில் ஒதுங்கிய படகில் இரு மர்ம ஆசாமிகள் கடலில் குதித்து தப்பியதாக தெரிகிறது. கடல் நீர் சூழ்ந்த 2ம் மணல் தீடையில் தப்பிய இருவரை சுங்கதுறையினர் பிடிக்க முடியாதது மர்மமாக உள்ளது. இவர்கள் யார், இக்கும்பலுடன் வேறு யாரும் தொடர்பு வைத்துள்ளனரா என மத்திய, மாநில உளவுதுறையினர் விசாரிக்கின்றனர்.-

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.