Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த என்ஜினீயர் கொலை..


கடலூரை அடுத்த கோண்டூர் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 29). என்ஜினீயரான இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 
1-ந்தேதி வேலைக்குச்சென்ற சதீஷ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தியதில், சதீஷ்குமாரின் செல்போனுக்கு அவருடைய நண்பர் தினேஷ் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது. ஆனால் தலைமறைவான தினேஷ் போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று காலை சரண் அடைந்தார்.

விசாரணையில் சதீஷ்குமாரை கொன்று புதைத்ததை தினேஷ் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடந்த 1-ந்தேதி அன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார், இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ், தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர், தினேஷ் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் கடலூருக்கு சென்று சினிமா பார்த்து விட்டு மீண்டும் தினேஷ் வீட்டுக்கு சென்றனர். அங்கு மது அருந்திய தினேஷ், சதீஷ்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். அதற்கு சதீஷ்குமார் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த தினேஷ் சதீஷ்குமாரை தாக்கினார். படுகாயம் அடைந்த சதீஷ்குமார் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து சதீஷ்குமாரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தினேஷ் புதைத்தார். மேலும் சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை தேவனாம்பட்டினம் அருகே முட்புதருக்குள் போட்டுவிட்டு தினேஷ் சென்னைக்கு சென்று விட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர் போலீசார் தேடுவதை அறிந்ததும், கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் இன்று (புதன்கிழமை) சதீஷ்குமாரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.