April 26, 2016
தமிழகத்தில் ஒழியாத கவுரவக் கொலைகள்
தமிழகத்தில், சாதி கூடாது., சாதீய மோதல்கள் கூடாது., சாதீய கொலைகள் கூடாது., சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்வோரை கொலை செய்யக்கூடாது., கலப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும்., சாதீயக்கொலைகளை அனுமதிக்க கூடாது., கவுரவ கொலைகளுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைத்து போராடிய தந்தை பெரியாரின் கொள்கைகள், இன்றும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி இருந்தாலும், சாதீய கட்சிகளும், சாதி அமைப்புகளும், சாதிக்கு ஆதரவாக இருப்பவர்களும் இப்போதும் இல்லாமல் இல்லை. இப்படித்தான் இன்று தமிழகத்தில் சாதீயம் கூடாது என்போரும், சாதீயத்தினை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையில் தூக்கி வைத்து ஆடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி இளவரசன் சாதி விட்டு சாதி கல்யாணம் செய்தான். அவனது மனைவி திவ்யா, அவனோடு சில மாதங்கள் “குடும்பம்” நடத்தியுள்ளார். அப்படி இருந்தும், அவர்கள் வாழ்வில், சாதீயம் வெற்றி பெற்று விட்டது., தண்டவாளத்தில் தலை வைத்து இளவரசனும், தனது உயிரை போக்கிக்கொண்டான். இதுதான், காதல் திருமணமும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வோரின் இறுதி முடிவாக இருக்கிறது. இதற்கு மற்றொரு உதாரணம், திருச்செங்கோட்டில், என்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை. அவரை கொலை செய்து, பிணத்தை தண்டவாளத்தில் போட்டு விட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இப்போது, கவுசல்யா என்ற தன்னுடன் என்ஜினீயரிங் படித்துவந்த பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சங்கர் என்ற தலித் மாணவர், உடுமலைப்பேட்டையில், பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். இந்த கவுரவக்கொலையின் பின்னணியில், கவுசல்யாவின் தந்தையும், உறவினர்களும் இருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் உறுதியாகி இருக்கிறது.
இதற்கிடையில், தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 81 கவுரவ கொலைகள் நடந்திருப்பதாக, புள்ளி விவரம் கூறுகிறது.இதனை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் இன்னும் சாதீயம் ஒழிய வில்லை என்பதையே காட்டுகிறது., அதே நேரத்தில் சாதீயம் வளர்ந்து விட்டதோ? என்ற கேள்வியும் எழாமல் இல்லை…!!!.
தமிழகத்தில் ஒழியாத கவுரவக் கொலைகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.