Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2016

இன்றளவும் இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்கும் சில கேவலமான நிகழ்வுகள்!



"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.." என ஒரு பாடல் இருக்கிறது. சற்று இதை மாற்றிக் கொள்வோம். "என்ன ஊழல் இல்லை இந்த திருநாட்டில், உலக எம்.என்.சி கம்பெனிகள் மட்டுமே இயங்கும் நம் நாட்டில்.."
காதல் திருமணம் 
காதலித்து திருமணம் செய்து கொண்ட கடவுளை காலில் விழுந்து வணங்குவோம். ஆனால், நம் வீட்டில் யாராவது காதலித்தால் கால்களை உடைத்து வீட்டில் உட்கார வைப்போம் என மிரட்டுவோம்.
மாதவிடாய் 
இரத்தப் போக்கு ஏற்படும் கடவுளான காமாக்யா தேவி வணங்கும் பண்புடைய நம் நாட்டில் தான், அந்த மூன்று நாட்களில் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது என்று தடையும் உண்டு. காலங்கள் மாறியும், பாதுகாப்பு உபகரணங்கள் வந்த பிறகும் கூட இந்த தடை நீடிப்பது ஏன்?
ஹீரோ
நாட்டுக்காக உயிர் கொடுத்து காத்த இராணுவ வீரர்களை பற்றி பெருமை அடைவதை விட, தோணி கால்களில் பாதுகாப்பு கவசம் இன்றி இரண்டு பந்துகளுக்கு நின்றதை தான் நாம் பெருமையாக கருதுவோம்.
திரைப்படம்
சமுதயாத்திற்கு நல்லது கூறும்படியான படங்கள் வருவதில்லை என குற்றம் கூறும் நாம், குப்பை படங்களை தான் ஆதரித்து கோடிக்கணக்கான ரூபாய் வருமனாம் அடைய செய்வோம்.
சுத்தம் செய்வோம்
நாட்டை சுத்தம் செய்வோம் என்று ஊர் ஊராக சென்று பிரதமர் திட்டங்கள் பரப்புவார். ஆனால், பொதுவிடங்களில் குப்பை தொட்டிக்கு கூட பூட்டு போட்டு வைக்கும் அவலம் தொடர்கதை. குப்பை தொட்டியிலும் கூட அவ்வளவு திருட்டு நம் நாட்டில்.
உடலுறவு 
திருமணமான முதல் நாளே, யார், எவர் என்று தெரியாத நபருடன் உடலுறவுக் கொள்ள, பூ அலங்காரம் செய்து, பால் கொடுத்து அனுப்புவோம். ஆனால், வெளிப்படையாக உடலுறவு பற்றி பேசினால் தேச துரோக குற்றத்தை போல காண்போம்.
எச்சில், சிறுநீர்
எந்த சுவரில் எச்சில் துப்பாதே, குப்பை கொட்டாதே, சிறுநீர் கழிக்காதே, போஸ்டர் ஒட்டாதே என்று வாசகம் எழுதியிருக்கிறதோ அங்கு தான் அனைத்தையும் செய்வோம்.
அவலம்
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்றவர்கள் கூட தெருவில் வியாபாரம் செய்யும் அவலம் நமது நாட்டில் தான் இருக்கிறது. கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டையும், விளையாட்டாக கூட நாம் ஆதரிப்பது இல்லை
வேதனை 
சிம் கார்டுகள் இலவசம், ஆனால், அரிசி, பருப்பு, உணவு பொருட்கள் விலை அடிக்கடி உயரும். அத்தியாவசிய பொருட்களில் வரி உயர்வும், வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களில் வரியை குறைத்து சலாம் போடுவதும் நமக்கு கை வந்த கலை.
ஊடகம் 
23 வருடம் கழித்து உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை ஊடகம் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு மாதம் முழுக்க கொண்டாடியது. ஆனால், நடந்த அனைத்து உலக கோப்பைகளையும் வென்ற இந்திய கபடி அணியை பற்றி ஒரு நாள் கூட முழுப்பக்க செய்தி வராது.
கற்பழிப்பு 
கற்பழித்தவன் சில கால சிறை தண்டனைக்கு பிறகு வெளிவந்துவிடுவான். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண் தன் வாழ்நாள் முழுவதும் வீட்டிலேயே சிறை கைதியாகி கிடப்பாள்.
அரசு 
அனைத்து நாட்டிலும், தனியாரை காட்டிலும் நவீன தொழில்நுட்பத்தில் அரசாங்க மருத்துவம், பள்ளி, கல்லூரிகள் தான் இயங்கும். ஆனால், நம் நாட்டிலும் முற்றிலுமாக தலைகீழ்.
ஆட்சி 
மேலாண்மை, சட்ட ஒழுங்கு, மனித கட்டமைப்பு, நகர கட்டமைப்பு, சமூக பராமரிப்பு, சுற்றுசூழல் என அ முதல் ஃ-ன்னா வரை அனைத்தும் கற்று அறிந்த மாவட்ட ஆட்சியர்கள் போதிய அறிவுக் கூர்மை கூட இல்லாத சில அரசியல்வாதிகளுக்கு கீழே வேலை செய்வதும் நமது நாட்டில் தான்.





















No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.