April 26, 2016
விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை ஏலம் விடுவதற்காக தூசி தட்டும் ஏர் இந்தியா
ஏலம் விடுவதற்கு முன்பாக விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை பழுது பார்க்க ஏர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது இந்திய சேவை வரித்துறை.
28 மில்லியன் டாலர் வரி பாக்கிக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொகுசு விமானத்தை சேவை வரித்துறை கைப்பற்றியது. தற்போது அந்த விமானத்தை ஏலம் விட சேவை வரித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் மே 12 மற்றும் 13-ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விஜ்ய மல்லையாவின் ஜெட் ஏர்பஸ் 319 ரக விமானம் பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டது. இந்த விமானத்தை வீடு மற்றும் அலுவலகமாக விஜய் மல்லையா பயன்படுத்தியுள்ளார். உலகின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர ஜெட் விமானங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் விலை 25 மில்லியன் டாலர் ஆகும். இதில் கருத்தரங்க அறை, படுக்கை அறை, குளியல் அறை என அனைத்து அம்சங்களும் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அந்த விமானத்தை சுத்தம் செய்து, பழுது பார்க்க ஏர் இந்தியா பொறியாளர்களை பணி அமர்த்தியுள்ளது சேவை வரித்துறை. ஏர் இந்தியா பொறியாளர்களின் மேற்பார்வையில் விமானத்தின் உள் மற்றும் வெளிப் பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தின் வெளிப்பகுதி சேதம் அடைந்துள்ள போதும், உள்பகுதி நன்றாக இருப்பதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் விமானத்தின் எஞ்சின் மற்றும் லேண்டிங் பகுதிகள் பழுதுப்பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை ஏலம் விடுவதற்காக தூசி தட்டும் ஏர் இந்தியா
Reviewed by மறத்தமிழன்
on
April 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.