Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

நம் வாழ்க்கையில் நாம் தொலைத்து விட்ட நண்பன் இலங்கை வானொலி






எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தென் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் இதன் பாதிப்பில்லாமல் வாழ்ந்திருக்க முடியாது. தமிழ்சேவை ஒன்று, தமிழ்சேவை இரண்டு என்று இருவிதமான ஒளிபரப்பினை நடத்தி வந்த இலங்கை வானொலி நம் வாழ்க்கையில் நாம் தொலைத்து விட்ட நண்பன்.
83 ம் ஆண்டு இனக்கலவரங்களில் அவன் கடுமையாக காயமுற்று விட்டான் . அதன் பின்பு அவனை முழுமையான வீச்சில் நான் பார்க்கவில்லை.
தமிழர்களிடம் வானொலி கேட்கும் வழக்கத்தையும், நல்ல தமிழ் பேசக் கூடிய ஆர்வத்தையும் வளர்த்தது இலங்கை வானொலி. இப்போது FM வானொலி நிலையங்களை கேட்கும் போது தரமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை தர இயலாத கற்பனைப் பஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது. பாடல்களை ஒலிபரப்புவதையும் பல்வேறு சுவைகள் கலந்து செய்யலாம் என்பதை நிரூபித்துக் காட்டியது இலங்கை வானொலி..

இலங்கை வானொலியில் நிகழ்ச்சிக்கு தரப்பட்ட அழகிய தமிழ் பெயர்கள் இன்றும் நினைவில் நிற்பவை...
1. பொங்கும் பூம்புனல் ( காலை 7.00)
2. நேயர் விருப்பம்
3. நீங்கள் கேட்டவை ( காலை 9.30 -10.00, மாலை 5.30-5.58)
4. அன்றும் இன்றும்
5. புது வெள்ளம்
6. மலர்ந்தும் மலராதவை
7. இசைத் தேர்தல்
8. பாட்டுக்கு பாட்டு
9. இசையும் கதையும்
10. இன்றைய நேயர்
11. விவசாய நேயர் விருப்பம்
12. இரவின் மடியில் ( இரவு 10.30)
ஞாயிறன்று பகல் 1.30க்கு எழுபதுகளின் இறுதியில் 'இசைத் தேர்தல்" என்ற பாடல்களைத் தரப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்பாடல்தான் முதலிடத்திற்கு வரும் என பந்தயம் கட்டி, ஆவலுடன் தமிழகமே காத்திருந்தது அந்த காலம். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் வரும் "என்னடி மீனாட்சி" பாடல் ஓராண்டுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தது...


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.