Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

உறவில் ஈடுபடும் போது அங்கே வலி ஏற்படுகிறதா?



சிலருக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கு காரணம் அவர்கள் தாங்கள் ஈடுபடும் நிலை அல்லது முறை சரியில்லையோ என கருதுவதும் உண்டு. ஆனால், பல சமயங்களில் இவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவதற்கு காரணம் உடல்நலக் கோளாறுகள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் - எச்சரிக்கை!!! சிறுநீர் பாதை நோய் தொற்று, ஈஸ்ட் தொற்று, சொரியாஸிஸ் போன்ற உடல்நலக் கோளாறுகளின் காரணங்களால் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம் என உடலியல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தொடர்ந்து உடலுறவில் ஈடுபடும் போது ஆண்குறியில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்....

யூ.டி.ஐ யூ.டி.ஐ என்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஆகும். இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூட ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


ஈஸ்ட் தொற்று:  ஈஸ்ட் தொற்று என்பது பெண்களிடம் இருந்து பரவுவது. நீங்கள் உடலுறவுக் கொள்ளும் துணைக்கு இந்த ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் மூலம் ஆண்களுக்கு பரவி உடலுறவில் ஈடுபடும் போது வலியை உண்டாக்கலாம்.


சொரியாஸிஸ் சருமத்தில் உண்டாகும் சொரியாஸிஸ் காரணமாக கூட ஆண்மை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம். இதனால் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றன


டெர்மட்டிட்டிஸ் (ஒவ்வாமை) சில ஆண்களுக்கு சோப்பில் கலக்கப்படும் கெமிக்கல் சேராது. இதனால் ஏற்படும் அழற்சியினால் கூட பிறப்புறுப்பு பகுதியில் வலி உண்டாகலாம்.

ஹெர்ப்ஸ் ஒரு வகையான பால்வினை நோய் தாக்கம் இந்த ஹெர்ப்ஸ். இது உடலுறவில் ஈடுபடும் போது வலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, துணைக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

மேல்தோல் ஆண்குறியின் மேல்தோல் மிக இறுக்கமாக இருந்தாலும் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம்.

சுக்கிலவழற்சி (Prostatitis) புரோஸ்டேட் சுரப்பியில் அழற்சி / எதிர்வினை தாக்கம் உண்டானால் கூட ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி உண்டாகலாம்

காயங்கள் சிலர் ஆவேசமாக உடலுறவில் ஈடுபடும் போது மேல்தோலில் உராய்வு அல்லது கிழிசல் ஏற்பட்டால் கூட வலி உண்டாகலாம். அந்த காயம் சரியாகும் வரை உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்ல











No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.