Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

அக்குள் பகுதியில் அதிக வியர்வை என்ன செய்யலாம்?


  எடை அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும் என்பதால், அதை முதலில் கவனிக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டைகளில் அதிக பருமன் சேராமலிருக்க கைகளை தினமும் சில முறைகள் கடிகாரச் சுழற்சியிலும் அதற்கு எதிர் சுழற்சியிலும் சுற்ற வேண்டும். 100 சதவிகித காட்டன் உடை மற்றும் உள்ளாடைகளே அணிய வேண்டும். அக்குள் பகுதியில் உள்ள ரோமங்களை நீக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

கோரைக்கிழங்கு - 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம், வெட்டிவேர் - 50 கிராம், பூலாங்கிழங்கு - 100 கிராம் எல்லாவற்றையும் நைசாக அரைத்து, சிறிது எடுத்து வெந்நீரில் குழைத்து அக்குள் முதல் முழுக்கைகளுக்கும் தடவி 5 நிமிடங்கள் ஊறிக் குளிக்கலாம்.

மரிக்கொழுந்து - 200 கிராம், வெள்ளரி விதை- 50 கிராம், பயத்தம் பருப்பு- 100 கிராம் மூன்றையும் நைசாக பொடித்து, அக்குள் பகுதியில் பேக் போல போட்டுக் குளித்தால் அந்த இடம் மென்மையாகும். நாற்றம் நீங்கும்.குப்பை மேனி இலை, வில்வ இலை, துளசி, பூலாங்கிழங்கு - தலா 100 கிராம், வேப்பந்தளிர் - 25 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து அக்குள் பகுதியில் தடவி ஊறிக் குளித்தால் அந்தப் பகுதியில் ரோம வளர்ச்சி குறையும். சருமம் மென்மையாகும். வியர்வை கட்டுப்படும்.

குளி்க்கிற தண்ணீரில் துளசி, வேப்பிலை, லவங்கம் சேர்த்தரைத்த பொடியை கடைசியாக கலந்து குளிக்கலாம். 3 டீஸ்பூன் பார்லி பவுடருடன், அரை டீஸ்பூன் பச்சை கற்பூரத்தைப் பொடித்து, பாலில் குழைத்து அக்குள் பகுதியில் தடவிக் கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவினாலும் நாற்றமும் வியர்வையும் கட்டுப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.