April 27, 2016
இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம்
காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகினர்
கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி தர்சன சமில் பிரேமதிலக்க தெரிவித்துள்ளார். மேகங்களுடன் மேலே அல்லது கீழே இந்தக் காற்று பலமாக வீசக்கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். மழை பெய்வதற்கு முன்னதாக கடுமையான குளிர் ஏற்படலாம், பத்து நிமிடங்கள் வரையில் பலத்த காற்று வீசலாம்.இந்த வகை மேகங்கள் காணப்படும் 3 முதல் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு மட்டும் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
சூறாவளி காற்று தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க முடியாது என்ற போதிலும் இடி மற்றும் கடும் மழை பற்றிய எதிர்வு கூறல்கள் வெளியிடப்படும் பகுதிகளில் அவதானமாக இருப்பதன் மூலம் திடீரென ஏற்படக்கூடிய சூறாவளித் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.