Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்






இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மார்டன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள். 

* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய சொந்த விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள். 

 சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். இதனால் அவர்கள் உங்கள் மேல் அதிக அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்! 

 உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர. 

சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள். 

 ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது. இதனால் அவர்கள் உங்கள் மேல் வேறு எண்ணம் வர காரணமாக அமையும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.