Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

விமானம் நடுவானில் பறக்கையில் பயணியை நறுக்கென்று கடித்த கோபக்கார சக பயணி



  துபாயில் இருந்து லண்டனுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவர் சக பயணியை கடித்து காயப்படுத்தினார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணிகளுடன் துபாயில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு கிளம்பியது. விமானம் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் அதில் இருந்த 21 வயது வாலிபர் ஒருவர் சிப்பந்தி பெண்ணான ஹெய்லியுடன் பிரச்சனை செய்தார்.

  இதை பார்த்த சக பயணியான இங்கிலாந்தின் ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவனை சேர்ந்த கிறிஸ்டோபர் மெக்நெர்லின் ஹெய்லியின் உதவிக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கிறிஸ்டோபரின் கையில் நறுக்கென்று கடித்துவிட்டார். இதில் கிறிஸ்டோபர் காயம் அடைந்தார். அந்த வாலிபரை சிப்பந்திகள் சேர்ந்து பிடித்து இருக்கையில் அமரவைத்து கையில் விலங்கிட்டனர். விமானம் தரையிறங்கியதும் அவர் லண்டன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் விமானி கென்டால் கிறிஸ்டோபரை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். விமானியின் அறையை பார்த்ததில் மகிழ்ச்சி என கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.