April 29, 2016
பஞ்ச ரோடு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா ... ???அதுதான், "பஞ்ச ரோடு" ... .. என்று சொல்லுவார்கள் ... !!! "பஞ்ச ரோடு" - - என பெயர் வர காரணம் என்ன தெரியுமா.?1895-ம் ஆண்டு இந்திய நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.அப்போது ஆங்கிலேயர்களின் கணக்கு படி, சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால், பட்டினியால் மட்டுமே இறந்துவிட்டனர் ...
அந்த நேரத்தில், வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டான். வெளிநாடுகளில் இருந்து கப்பல், கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும், பஞ்சம் தீரவில்லை எங்கு பார்த்தாலும் பசி பட்டினி ... மரண ஓலங்கள் ...அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரர்கள், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே, அப்போதைய சென்னப்பட்டினத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி வரைக்கும், அந்த சாலையை அமைத்தார்கள். ரோடு போடும் வேலையில் ஈடுபட்டவர்களுக்கு கூலியாக ஒரு குவளை அரிசி கஞ்சி மட்டும் கொடுக்கப்பட்டதாம்.
அதனாலதான் அந்த (திருச்சி - சென்னை) ரோட்டுக்கு .... பஞ்ச ரோடு ....என்று பெயர் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அப்போதைய இந்திய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே ... இப்போது 120 கோடிக்குமேல் ...
அதே பஞ்சம் இப்போது வந்தால் என்ன ஆகும் ... ??? சற்றே சிந்தித்துப் பாருங்கள். !! விவசாயிக்கும், விவசாயத்துக்கும் இந்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், ஏழை விவசாயிகளின் தற்கொலைக்கு, இந்திய அரசு தீர்வு காணுமா ?.
பஞ்ச ரோடு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.