Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

ஃபேஸ்புக் தோழியை நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த டெல்லி கான்டிராக்டர்




டெல்லி: ஃபேஸ்புக் நண்பர் மற்றும் ஒருவரால் மும்பை பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் 26 வயதான சோனியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கும் டெல்லியை சேர்ந்த கான்டிராக்டர் மனிஷ் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நட்பாகி நட்பு காதலாகியுள்ளது.

மனிஷ் சோனியாவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதுடன் அவரை டெல்லிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து சோனியா கடந்த 7 மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு ஜாகையை மாற்றினார்.
டெல்லியில் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார் சோனியா. இந்நிலையில் திருமணம் பற்றி பேச மனிஷ் சோனியாவை கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு வந்த சோனியாவை பிடித்து வைத்து அவரது வாயில் மதுவை ஊற்றி மனிஷ் மற்றும் டெல்லி மாநகராட்சியில் என்ஜினியராக உள்ள அவரது நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் இயற்கைக்கு புறம்பான வகையிலும் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் காயம் அடைந்த சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனிஷை கைது செய்துள்ளனர். அவரின் நண்பரை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.