Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

தேர்தல் வெற்றிக்காக நள்ளிரவு பூஜை போலி சாமியார் கைது



பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தை ஒட்டியுள்ள மலை அடிவாரத்தில் கார்த்திக்கேயன் என்பவர் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். இங்கு தமிழகத்தை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர் அடிக்கடி உயர்ரக கார்களில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆசிரமத்திற்குள் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற இளைஞர்கள், மனித மண்டை ஓடுகள், மனிதமூளை உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளையும், பலியிட்ட விலங்குகளின் உறுப்புகளையும் ஆசிரமத்துக்குள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ஆசிரமத்தில் இருந்தவர்களை சிறைப்பிடித்த கிராமமக்கள், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார்த்திகேயன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டியும், சில குறிப்பிட்ட காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காகவும் பலரும் தன்னை நாடி வந்ததாகவும், அவர்களுக்காக நரபலி யாகம் நடத்தியதாகவும், கார்த்திகேயன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இந்த போலி சாமியார் இளவயதுள்ளவராக காட்சி அளிக்கிறார். இவரது ஆசிரமம் 10 ஏக்கருக்கு மேலாக உள்ளது . கூரை வேய்ந்த கொட்டகைகள் போடப்பட்டுள்ளது. துர் மரணம் அடைந்தவர்களின் மனித மூளை பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், குழந்தைகளின் மண்டை ஓடுகள் அங்கு இருப்பதாகவும் தெரிய வருகிறது.இந்த போலி சாமியார், ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விலை உயர்ந்த காரை பயன் படுத்தி வருகிறார். இவரது ஆசிரமத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து அதிகம் பேர் தேர்தல் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள், நரபலி கொடுப்பதற்காக வந்ததாக தெரிய வருகிறது.
இதற்காக சாலைகளில் சுற்றித்திரியும் மனநலப் பாதிக்கப்பட்டவர்களையும், பிச்சைக்காரர்களையும் அழைத்து வந்து, நரபலி கொடுத்ததும், அனாதை குழந்தைகளை அதிக விலை கொடுத்து வாங்கி நரபலி கொடுத்ததாகவும், அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள், மிகுந்த அச்சத்தை உறைந்துள்ளனர். தற்போது அந்த ஆசிரமம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் நடந்தது என்ன? என்பதை வெளி உலகுக்கு கொண்டு வர, உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.