Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

அதிகரிக்கும் பாலியல் பலாத்காரம்: துவாரகா பீட சாமியாரின் சர்ச்சைக் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்






சனி பகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்ததால், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும்" என்று கருத்துக்காக சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா மன்னிப்பு கேட்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் பல வலியுறுத்தியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் சிங்கணாப்பூர் சனி பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் இருந்தது.
இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர். இதையடுத்து கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாக கோயில் கருவறை வரை சென்று பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துவாரகா பீடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா "சனிக் கிரகம் பெண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. சனி கோயில் கருவறைக்கு செல்லாமல் தவிர்ப்பது அவர்ளுக்கு நல்லது. ஆனால், சனி பகவான் கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு மகளிர் அமைப்புகள் பல கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகளிர் உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறும்போது, "சாமியார் ஸ்வரூபானந்தாவின் கருத்து மூர்க்கத்தனமானது.
இந்தியாவில் பலாத்காரம் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. பலாத்காரத்தையும், பெண்களின் கோயில் வழிப்பாட்டையும் ஒப்பிட்டு பேசுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
பெண்களை இழிவுபடுத்தும் அந்தக் கருத்தை அவர் திரும்பப் பெறாவிட்டால் அவரது மடத்தின் முன் திரண்டு போராட்டங்கள் நடத்துவோம்." என எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.