April 30, 2016
ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி
கள்ளக்குறிச்சி : "நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி. மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார். எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார். மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார். ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.