April 23, 2016
ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு வரவழைத்த சரண்யா!!!...........
வீட்டில் தனியாக இருப்பதாக ஆசைவார்த்தை கூறி வரவழைத்து தொழில் அதிபரை தாக்கி நகை, பணத்தை பறித்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழில் அதிபர்
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது 36). இவர் அதே பகுதியில் எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த சரண்யா(18) என்பவர் வேலை செய்து வந்தார். அப்போது பாண்டியனுக்கும், சரண்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சரண்யா, பாண்டியனுக்கு போன் செய்து தான் வீட்டில் தனியாக இருப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு வரவழைத்தார். அதை நம்பி சரண்யா வீட்டுக்கு சென்ற பாண்டியன், அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
வைர மோதிரம், நகை பறிப்பு
அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் சரண்யா வீட்டுக்குள் புகுந்தது. அங்கிருந்த பாண்டியனை அடித்து உதைத்த அந்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி பாண்டியனிடம் இருந்த ரூ.48 ஆயிரம் பணம், அவர் அணிந்து இருந்த வைர மோதிரம் மற்றும் 10 பவுன் நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு விரட்டி அடித்தனர்.
இதுபற்றி வெளியில் சொல்ல தயங்கிய பாண்டியன், கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் சென்றபோது மர்மநபர்கள் தன்னை தாக்கி வைரமோதிரம், தங்க நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாக கொடுங்கையூர் போலீசில் புகார் கூறினார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர், உண்மையில் நடந்த விவரங்களை கூறினார்.
அக்கா கணவர்
இதையடுத்து போலீசார் சரண்யாவை பிடித்து விசாரித்தனர். அப்போது சரண்யா தான் தனது அக்கா கணவர் பாபு(36) மற்றும் அவரது கூட்டாளிகளான வியாசர்பாடியை சேர்ந்த வினோத் என்ற ஆரோக்யசாமி(26), மதுரைமுத்து (26), ராஜேஷ்(26) ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக திட்டம்போட்டு தொழில் அதிபர் பாண்டியனை வீட்டுக்கு வரவழைத்து அவரை தாக்கி நகை, பணத்தை பறித்தது தெரிந்தது.
பாபுவையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவரது வயிற்றில் காயம் இருந்தது தெரிந்தது. அதுபற்றி போலீசார் கேட்டபோது, பாண்டியனிடம் பறித்த நகைகளை வீட்டில் வைத்து இருந்தபோது தன்னை சிலர் தாக்கிவிட்டு அதை பறித்துச் சென்றதாக கூறினார்.
5 பேர் கைது
போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பாபு தனது கூட்டாளிகளை ஏமாற்றி பாண்டியனிடம் பறித்தவற்றை தானே வைத்துக்கொள்வதற்காக தனக்குத்தானே கத்தியால் கீறிக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து சரண்யா, பாபு உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைர மோதிரம், நகை மற்றும் பணத்தை கைப்பற்றினர்.
ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு வரவழைத்த சரண்யா!!!...........
Reviewed by மறத்தமிழன்
on
April 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.