April 20, 2016
சென்னையில் ஓட்டல் ஊழியர் படுகொலை
சென்னை,ஏப்.20 (டி.என்.எஸ்) சென்னை திருவல்லிக்கேணி, அக்பர் சாகிப் தெருவில் கணேஷ் மெஸ்
என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் சாம்பார் தயாரிக்கும் சமையல் மாஸ்டராக வேலை செய்தவர் ஆறுமுகம் (வயது 52). அவருடன் அதே ஓட்டலில் தோசை, பரோட்டா செய்யும் மாஸ்டராக பணியாற்றியவர் முருகானந்தம் (42). இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்பத்தினர் சொந்த ஊரில் உள்ளனர்.
இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணியில் வேலை செய்யும் ஓட்டலில் உள்ள அறையில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் ஆறுமுகத்தை, போதையில் இருந்த முருகானந்தம் கேலி, கிண்டல் செய்தபடி இருந்தார். இதையொட்டி, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆறுமுகம் திடீரென்று, காய்கறி வெட்டும் கத்தியால், முருகானந்தத்தின் கையில் குத்திவிட்டார். இதில் காயம் அடைந்த முருகானந்தம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் இரவு 9 மணி அளவில் நடந்தது.
இதற்கு பழிக்குப்பழி வாங்க நள்ளிரவில் தூங்கும்போது, ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்டார். தூங்கிய ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து, பின்னர் 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையை ஆறுமுகத்தின் தலையில் போட்டு அமுக்கி, அவரை முருகானந்தம் தீர்த்துக்கட்டிவிட்டதாக தெரிகிறது. பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல, முருகானந்தம் ஓட்டலுக்கு வெளியில் படுத்து தூங்கிவிட்டார்.
நேற்று காலையில்தான், ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். உடனே திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முருகானந்தம் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னையில் ஓட்டல் ஊழியர் படுகொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.