திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக இதுவரை 84 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் அமித்ஷா, கூட்டணி கட்சித் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். இதையடுத்து மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.
அமித்ஷாவின் வருகையையொட்டி மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கூட்டம் நடக்கும் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.