Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

ஆன்லைன் விபசாரத்தை தடுக்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஒய்.அக்பர் அகமது. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், இதில் ஏராளமான ஆபாச இணையதளங்களும் உள்ளன. இதை பார்க்கும் இளைய தலைமுறையினரின் நல்ல மனதையும் கெடுக்கிறது. இதனால் குற்ற செயல்களும் அதிகரிக்கிறது.
இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ‘ஆன்–லைன்’ விபசாரம் பெரிய அளவில் நடைபெறுகிறது. இதனால் பாலியல் நோய்கள் பலருக்கு பரவுகிறது.
கடந்த 2000–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, ஆபாச பாடங்களை இணையதளத்தில் வெளியிடுவது, அதை பலருக்கு விநியோகம் செய்வது, அந்த ஆபாச படங்களை பார்ப்பது ஆகியவை கடுமையான குற்றம் என்றும் அதற்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
இந்த ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பும் நபர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. சைபர்கிரைம் போலீசார் மற்றும் விபசார தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஆண்டு ஏப்ரல் 4–ந் தேதி நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தேன்.
இதுவரை அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, ஆன்–லைனில் விபசாரம் செய்வோர், ஆபாச படங்களை வெளியிடுவோர், அதை விநியோகம் மற்றும் பார்ப்பவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர், மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், அந்த பதில் மனுவுக்கு மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் விசாரணையை வருகிற ஜூன் 21–ந்தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.