Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

பிடித்த பெண் துணை விமானியை கேட்டு ஏர் இந்தியா பைலட் அடம்: - என்ன கொடுமைட சாமி....


   
சென்னையில் இருந்து மாலி கிளம்பிய ஏர் இந்தியா விமானம் 2 மணிநேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது. தனக்கு பிடித்த பெண் துணை விமானி வந்தால் தான் விமானத்தை எடுப்பேன் என விமானி பிரச்சனை செய்ததால் அந்த தாமதம் ஏற்பட்டது. ஏர் இந்தியா விமானம் ஒன்று 110 பயணிகளுடன் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மாலிக்கு புதன்கிழமை கிளம்பியது. காலை 7 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் விமானியின் அடத்தால் 2 மணிநேரம் தாமதமாக 9.13 மணிக்கு கிளம்பியது.

விமானத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். விமானத்தை இயக்க வேண்டிய விமானி தனக்கு பிடித்த பெண் சக விமானி வந்தால் மட்டுமே விமானத்தை எடுப்பேன் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து அடம் பிடித்தார். அதனால் தான் விமானம் தாமதமாக கிளம்பியது. இதற்கிடையே தனக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டதாக தெரிவித்த விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சம்பவத்தின் பின்னணி பற்றி தெரிந்தவர்கள் கூறுகையில், குறிப்பிட்ட பெண் விமானிக்காக விமானத்தை தாமதமாக்கிய விமானி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது அவர் 6 மாத நோட்டீஸ் பீரியடில் உள்ளார். புதன்கிழமை சென்னையில் இருந்து கிளம்பும் விமானத்தில் தனக்கு பிடித்த பெண் துணை விமானியை நியமிக்குமாறு அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். அந்த பெண் துணை விமானி டெல்லி விமானத்தில் செல்ல உள்ளதால் இந்த விமானத்திற்கு அனுப்பி வைக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விமானியோ, பெண் விமானி வராவிட்டால் எனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி வேலைக்கு வரமாட்டேன் என மிரட்டினார். அப்படியும் அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் செவ்வாய்க்கிழமை அவர் பணிக்கு வரவில்லை என்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.