Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

பேச்சுலர் சாம்பார்


தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய - 1 (நீளமாக கீறியது) தக்காளி - 2 (நறுக்கியது) சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால், பேச்சுலர் சாம்பார் ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.