வெளிநாடுகளில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சாதாரண கட்டடங்களைக் கூட இடிக்கவிடாமல் அரசே பராமரிக்கிறது. ஆனால் நம் கிராமங்களில் மிகச் சாதாரணமாக ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள், கல்வெட்டுகள், குகை ஓவியங்கள் என காணக்கிடைக்கும். அவற்றின் அருமை உணர்ந்து, அரசும் அவற்றை பராமரிப்பதில்லை; மக்களும் மதிப்பளிப்பதில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் புராதன சுற்றுலா தலமாக உள்ள எண்ணாயிரம் என்ற கிராமத்தின் நிலையும் இதுதான்.
சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் தாண்டி, 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அமைதியான ஊர் எண்ணாயிரம். இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில், ஆயிரம் வருடம் பழமையானது. ராஜராஜ சோழன் கட்டியதாகவும், நரசிங்கப் பெருமாள்தான் அவனுக்குக் குல தெய்வம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஊரைச் சுற்றி 3 சோழர் கால சிவன் கோவில்கள் உள்ளன. ராமானுஜர் இக்கோவிலுக்கு இருமுறை வந்து போனதாகவும் குறிப்புகள் உள்ளன. எண்ணாயிரம் என்ற ஊர் பெயருக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றி கொன்றதால் எண்ணாயிரம் என பெயர் பெற்றதாகவும். எட்டாயிரம் சமணர்கள் இந்துக்களாக மாறியதால் எண்ணாயிரம் என பெயர் வந்ததாகவும் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. கவிகாளமேகப் புலவரின் ஊரும் இதே எண்ணாயிரம்தான்.
அழகிய நரசிங்க பெருமாள் ஆலயம் ஆயிரமாண்டு சிறப்பு பெற்றிருந்தாலும், அவற்றை பராமரிப்பு செய்யாமல் விட்டுள்ளனர். இங்குள்ள பல சிலைகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக ஊர்மக்கள் புலம்புகின்றனர். கோயிலில் உள்ள நரசிம்மன் சிலையின் இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு கோயில் ஓரம் வைக்கப்பட்டுள்ளது.
''கோயில் மதில் சுவர்களில் மையினால் கிறுக்கி வைக்கின்றனர். கோயிலுக்கு அருகே மது அருந்தும் அக்கிரமங்கள் நடக்கிறது. மற்ற பிரச்னைகளுக்கு எல்லாம் குரல் கொடுக்கும் இந்து அமைப்புகள் இதைப் பற்றி கவன ஈர்ப்பு போராட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. கோயிலின் சிறப்புகளை உணர்ந்து, இங்கு வரும் பக்தர்கள் கோயிலின் நிலை கண்டு நன்கொடை அளிக்கின்றனர். அதை வைத்து பராமரிப்பு பணிகளை செய்கிறோம். முழுதாக செம்மனிட்டு குடமுழுக்கு காண லட்சக்கணக்கில் செலவாகும். அதனை அறநிலையத்துறை கவனத்தில் கொண்டு செய்ய வேண்டும்” என்கிறார் கோயிலின் அர்ச்சகர்.
எண்ணாயிரம் மலையில் கி.பி. 9,10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 35 கற்படுக்கைகளும், 5 தமிழ்க் கல்வெட்டுகளும் இயற்கை குகைகளும் உள்ளன. தொண்டை நாட்டில் வேறெங்கும் இவ்வளவு கற்படுக்கைகள் ஒரே இடத்தில் இல்லை. 800 ஆண்டுகளுக்கு முன்பே வேதம் கற்க கல்லூரி இருந்திருக்கிறது. 10 ஆசிரியர்களும் 340 மாணவர்களும் இங்கு தங்கி வேதம் பயின்று வந்துள்ளனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உணவுப்படி வழங்கப்பட்டுள்ளது என்பது ஆச்சயமான தகவல்.
எண்ணாயிரத்தை சுற்றி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரம்மதேசத்தில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பாடலீஸ்வரர் ஆலயமும் எசாலம் என்ற ஊரில் ராமநாத ஈஸ்வரர் ஆலயமும் உள்ளது. இவை இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும் பெரிய அளவு பராமரிப்பு இல்லாமலேயே உள்ளது.
எண்ணாயிரம், எசாலம், பிரம்மதேசம் என்று இந்த புராதன கோயில்களை சுற்றி வந்தால் வரலாற்று சிறப்புகளை அறிந்துக்கொள்ளலாம். அதனை அழிய விடாமல் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
விழுப்புரத்திலிருந்து செஞ்சி போகும் வழியில், நேமூர் வழியாக எண்ணாயிரம் செல்லலாம். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் பேரணி, பெரியதச்சூர் வழியாக செல்ல வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.